பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



4

மாணிக்கவாசகர்



வழங்கினமை போன்று, திருவதவூரர் என்ற திருப்பெயரும் (திருவாதவூரிலுள்ள இறைவன் பெயர்) அடிகட்குப் பெற்றோரால் இடப் பெற்று வழங்கியதாகக் கருதுதல் பொருந்துமல்லவா?

நம்பி திருவிளையாடல் சிவகணத்தலைவர் ஒருவர் இவர்கட்கு மகனாகப் பிறந்தார் என்று செப்புகின்றது. திருப்பெருந்துறைப் புராணப்படி சம்புபாதாசிருதயர் தம் மனைவியார் சிவஞானவதியாருடன் சிவபெருமானை வழிபட்டுப் புத்த சமயக் குறும்பினைப் போக்கவல்ல மகன் ஒருவனைத் தந்தருள வேண்டுமெனக் குறையிரந்து வேண்டு கின்றார். இவரது வேண்டுகோளை நிறைவேற்றத் திருவுள்ளங் கொள்ளுகின்றார் கண்ணுதல் அப்பன். ஆகமப் பொருளை அறிவுறுத்தல் வேண்டுமெனக் கேட்ட சிவகன நாதர் ஆயிரவர், சிவபெருமான் கட்டளைப்படி திருஉத்தர கோசமங்கை [1] என்னும் திருத்தலத்தை அடைந்து


  1. உத்தரகோசமங்கை; இத்தலம் இராமநாதபுரத் திற்குத் தென்மேற்கில் 5 கல் தொலைவில் உள்ளது. இதற்கு மூவர் பர்டல் இல்லை. மாணிக்கவாசகர் மட்டிலுமே பாடியுள்ளார். ஒரு காலத்தில் இத் தலம் பாண்டியரின் தலைநகராக இருந்த்து. இப்போது இஃது ஒரு சிற்றுார். கோயில் ஒன்றே சிறப்பு. சுவாமி மங்களேஸ்வரர். தலப்புராணம் ஊர்ப் பெயர் பற்றிக் குறிப்பிடுகின்றது. ஒரு சமயம் சிவபெருமான் பார்வதி தேவிக்கு வேத மந்திரத்தை உபதேசிக்கின்றார். மீண்டும் கேட்கும்போது அவள் மறக்கின் றாள். சினங்கொண்ட சிவபெருமான் பூவுலகில் பூகலூர் என்னும் தலத்தில் அவதரிக்குமாறு சபிக்கின்றார். தாமும் ஓர் அந்த்ண்ராகப் பிறந்து பார்வதியை மணக்கின்றர்ர். மீண்டும் வேத மந்திரோபதேசம் செய்கின்றார். உத்தரம் - விடை: கோசம் - வேதம். இத்தலத்தில் நடராசர் கோயில் தனியாக உள்ளது. மணிவாசகப் பெருமான் நீத்தல் விண்ணப்பம் பாடியது இத்தலத்தில்தான்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/22&oldid=1018962" இலிருந்து மீள்விக்கப்பட்டது