பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருத்தில்லை அருளிச் செயல்கள் 233



ஆகும். அருளொடு கலத்தலால் ஆன்மா அடையும் சுத்தி அருட்சுத்தியாகும். தில்லையில் அருளிச் செய்யப்பெற்ற இப்பனுவல் ஒன்பது திருப்பாடல்களைக் கொண்டது.

ஊசலில் அசைந்தாடும் மகளிர் தம் சார்பில் நில்லாது தமக்கு ஆதாரமாகிய ஊசலின் சார்பில் அமைந்த அதன் வழியே இயங்கி மகிழ்தல்போன்று, சிவபெருமான்பால் நேயம் மிக்க அடியார்களும் தம் உணர்வின் வழியொழுகாது எப்பொருட்கும் சார்பாகிய இறைவனது அருளே சார்பாகப் பற்றி நின்று யாண்டும் இயங்கி மகிழும் திறத்தினை விளக்கும் நிலையில் அமைந்தது இத்திருப்பொன்னுாசல் எனக் கருத் துரைத்தல் ஏற்புடைத்தாகும். அருட்சக்தி இருந்தாடத் தாலாட்டல் பொன்னுரசல் என்று குறிப்பிடும் திருப்பெருந்துறைப்புராணம். இதனால் ஊஞ்சலில் இருந்து ஆடுவது அருட்சக்தியும், அங்ஙனம் ஆடத் தாலாட்டும் தொழிலினர் அன்புடைய மகளிரும் என்பது பெறப்படுகின்றது. இது திருக்கோயிலில் நிகழும் பொன்னுாசல் விழாவினை அடியொற்றி அமைந்ததெனக் கொள்ளுதல் பொருந்தும்.

இப்பனுவலில் ஒரு பாடலைக் காண்போம்.

கோல வரைக்குடுமி வந்து குவலயத்துச்
சால அமுதுண்டு தாழ்கடலின் மீதெழுந்து
ஞால மிகப்பரிமேல் கொண்டு நமையாண்டான்
சீலந் திகழும் திருவுத்தர கோசமங்கை
மாலுக் கரியானை வாயார நாம்பாடிப்
பூலித் தகங்குழைந்து பொன்னுச லாடாமோ (8)

(கோலவரைக்குடுமி - கயிலைமலையின் உச்சி, ஞாலம் - உலகம்; மிக உயர; பூவித்து - பூரித்து; (ரகரலகரப் போலி).

என்பது எட்டாம் பாடல். இதில், அழகிய வெள்ளிமலையின் தண் நின்று திகழ்பவன் சிவன். அவன் திருவுத்தரக்கோச