பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருத்தில்லை அருளிச் செயல்கள்-2 277



யாகின்றது. இதன் பயனாகச் சிவனைச் சுந்தரேசன் என்கின்றான். திருமலைச் சுந்தரராஜன் என்கின்றான்; அம்பிகையைச் செளந்தரிய நாயகி என்கின்றான். குமரனை முருகன் (முருகு அழகு) என்று கூறுவதன் உட்பொருள் அப்பொழுது அவனுக்குத் தெளிவாகின்றது. அழகும் இறைவனும் ஒன்று. அழகை போகத்துக்குரிய உலகப் பொருளாகப் புலப்படுத்திச் சீவன் தன்பால் துன்பத்தை வரவழைத்துக் கொள்ளு கின்றான். சவிகல்ப சமாதியில் அழகுத் தெய்வத்தோடு நேரான இணக்கம் வைத்து இன்புறுகின்றான். நிர்விகல்ப சமாதியில் அழகு என்னும் விபூதியும் மறைகின்றது. சுத்த சைதன்யமாகிய பரம்பொருளே எஞ்சி நிற்கின்றது.

            பாடல்-8
  சாதி விடாத குணங்கள்
     நம்மொடு சலித்திடும் ஆகாதே (அடி-1) 

(சாதி விடாத குணங்கள் - சாதியை விட்டுப் பிரியாத முக்குணங்கள்)

பொருள்: முக்குணங்களும் அவற்றினின்று உருவெடுத்து வருகின்ற சாதி பேதங்களும் அதீதத்தில் இடம் பெறுவதில்லை.

விளக்கம்: சத்துவம், இராஜசம், தாமசம் என்னும் முக்குணங்களால் ஆனது அண்டம் ; இந்தப் பிரகிருதி. இதில் உள்ள உயிர்வகைகளும் முக்குணங்களால் ஆகியவையாகும், ஒவ்வோர் உயிர்வகைகளிலும் பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்னும் நான்கு சாதிகள் உள்ளன. இவற்றின் உட்பிரிவுகளோ எண்ணிக்கையில் அடங்கா, பண்பாடு அடைந்து மேல்நிலைக்கு வந்தவன் பிராமணன். அவன் ஆசாரத்தில் சிறந்தவன்; ஒழுக்கத்தில் உறுதி பெற்றவன்; அறிவில் தெளிந்தவன்; தூய அன்பில் ஊறியவன்; அருளில் நிலைத்திருப்பவன்; செயலில் சிவ சேவையே வடிவெடுத்தவன்.