பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14 மாணிக்கவாசகர்



    உலோகா யதனெனும் ஒண்டிறல் பாம்பின் 
    கலாபே தத்த கடுவிடம் எய்தி 
    அதிற்பெரு மாயை எனைப்பல குழவும்"  4

என்ற பாடற்பகுதியில் குறிப்பிடுவதாகக் கருதலாம்.

வாதவூரர் மதுரையில் அமைச்சராயிருந்த பொழுது சமண் சமயவாதிகளும் புத்த பிட்சுகளும் தத்தம் சமய வாதங்களைப் புரிந்து கொண்டும், சைவசமய உண்மைகளைக் கடிந்து கொண்டும், சிவநிந்தனை புரிந்து கொண்டும் வருவதைக் காண்கின்றார். அந்தப் பரசமயவாதிகளின் கூற்றுகளும் வாதவூராரின் உள்ளத்தைப் புண்படுத்துகின்றன.

    அத்தேவர் தேவர் அவர்தேவர் என்றிங்கன்
    பொய்த்தேவு பேசிப் புலம்புகின்ற பூதலத்தே." 5

உண்மையான முழுமுதற் கடவுளாகிய தேவனைக் காட்டித் தரும் ஒரு சற்குருவை நாடி நிற்கின்றது அவர்மனம். அமைச்சருக்கு ஆட்சிமுறை பற்றிய அல்லல் சிறிதும் இல்லையெனினும் உலகவாழ்வும், வாழ்விற் காணும் பெரும்போகமும் நிலையற்றன என்பதை உணர்கின்றார்: வாழ்க்கையில் உவர்ப்புத் தோன்றுகின்றது. கூத்தினர் தன்மையும் கோல மும் வேறு வேறு ஆமாறு போல் இவர் மேற்கொண்டிருக்கும் அமைச்சர் பதவிக்கும் அன்பு கனிந்த அகப்போராட்டத் திற்கும் சிறிதும் தொடர்பற்ற நிலை உருவாகிக் கொண்டே வருகின்றது. இந்நிலையைப் பரஞ்சோதி முனிவர்,

    மெய்ம்மை யாம்பொருள் விவேகமும்
         வேறுபா டாய
    பொய்ம்மை யாம்பொருள் விவேகமும்
         புந்தியில் தோன்ற

4. திருவா - போற்றித் திருவகவல்-அடி 45, 47; 52.58. 5. திருவா. திருக்கோத்தும்பி-5.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/32&oldid=1012185" இலிருந்து மீள்விக்கப்பட்டது