பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/334

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

316 மாணிக்கவாசகர்



  ஆரணம் காண்என்பர் அந்தணர்;
     யோகியர் ஆகமத்தின் 
  காரணம் காண்என்பர்; காமுகர்
     காமநன்னூல் என்பர்; 
  ஏரணம் காண்என்பர்; எண்ணர்
     எழுத்தென்பர்; இன்புலவோர் 
  சீரணங் காயசிற் றம்பலக்
     கோவையைச் செப்பிடினே."
(ஆரணம் - வேதம்; எண் - தருக்க நூல்; எழுத்து - இலக்கண நூல்) 

என்று பிற்காலச் சான்றோரொருவர் கூறிய பாடல் சிந்தித்து மகிழத்தக்து.

'செவ்வை நெறிகள் பற்பலவும், தெரியக்காட்டும் தமிழ்' மூதாட்டி ஒளவைப்பாட்டி

  தேவர் குறளும் திருநான் மறைமுடிவும் 
  மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை 
  திருவா சகமும் திருமூலர் சொல்லும் 
  ஒருவா சகம்என்றுணர் 10

என்று திருக்குறள், நான்கு மறை, தேவாரம், திருக்கோவையார், திருவாசகம், திருமந்திரம் என்ற நூல்களை ஒப்பாய்வு செய்து எல்லாம் ஒரே முடிவையே காட்டுகின்றன என்கின்றார். இவளுரை நம் வாழ்வில் என்றும் நின்று நிலவட்டும்.


10. நல்வழி - 40