பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/347

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அருளிச் செயல்களில் அடிகள் 329



அருட்குரவனாகிய இறைவன் திருநோக்கினாலும், நினைவாலும் தொடுதலாலும் அடிகளின் சித்தமலம் அறுவித்துப் பேரறிவு நல்கினன் என்ற அளவே கூறப்பெற்றுள்ளது. கடவுள் மாமுனிவரோ குருநாதர் அடிகளின் சென்னியில் திருவடி சூட்டித் தீக்கை செய்து, பல்லோருங்கான அவரது பாசத்தொடர்பாகிய மும்மலங்களையும் நீக்கியருளி, இறைவன் திருவடிகளை அகத்தும் புறத்தும் காணுமாறு காட்டிச் சொல்லிறந்த பேரின்பமாகிய சிவானந்தப் பெருந் தேனை நுகர்ந்து இன்புறும் முறையை அறிவுறுத்தி "நின்னை ஒரு பொழுதும் பிரியேன்” (அகப் பொருள் தலைவன் கூறுமாப்போல!) என அன்புரை பகர்ந்து அழிவிலாப் பேரின்ப வாழ்வில் அடிகளை நிலைபெறச் செய்ததாக விரித்துக் கூறுவர்.

  பெரியோன் ஒருவன் கண்டுகொ
     ளென்று பெய்கழ லடிகாட்டிப் 
  பிரியேன் என்றென் றருளிய வருளும்
     பொய்யோ எங்கள் பெருமானே (598)
                                   -எண்ணப்-2 

என்ற எண்ணப்பதிகப்பாடற் பகுதியாலும்,

  காயத் துள்ளமு துறவூறே
     கண்டு கொள்ளென்று காட்டிய 
  சேய மாமலர்ச் சேவடிக்கணஞ் 
     சென்னி மன்னித் திகழுமே (581) 
                             -சென்னிப்-5 

என்ற சென்னிப்பத்துப் பாடற் பகுதியாலும்,

  வாக்கிறந் தமுதம் மயிர்க்கால் தோறும் 
  தேக்கிடச் செய்தனன் கொடியேன் ஊன்றழை 
  குரம்பை தோறும் நாயுட லகத்தே 
  குரம்பைகொண் டின்றேன் பாய்த்தி நிரம்பிய 
  அற்புதமான அமுத தாரைகள்