பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/366

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. மணிவாசகரின் சிவநெறிக் கொள்கை சிைவ சமய குரவர் எனப்போற் றப்பெறும் நால்வரும் (ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்) சிவநெறி வளர்த்த செந்தமிழ்ச் செல்வர்கள். இந்நால்வரும் சைவ உலகில் இறையருளால் சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம் கைவரப் பெற்ற திருநெறிச் செல்வர்களாகத் திகழ்கின்றனர். இவர்களை இறைவன் தானே எளிவந்து ஆட்கொண்டு சிவகதியில் சேர்த்தருளின வரலாற்றை தமிழ் மெய்ந்நூல்களால் அறியலாம். மேற் குறிப்பிட்ட நால்வருள் காலமுறைப்படி நாலாமவராக வைத்தெண்ணப்படுவர் மணிவாசகப் பெருமான். இவர் தமக்கு முன்னுள்ள தேவார ஆசிரியர் மூவரும் அம்மூவர்க்கும் காலத்தால் முற்பட்ட திருமூலரும் கொண்டொழுகிய சைவ. சித்தாந்தம் என வழங்கும் சிவநெறிக்_கொள்கையினையே மேற்கொண்டொழுகிய-சிலர். இதனைத் தாம் அருளிய திருவாசகத்திலும் திருக்கோவையாரிலும் அடிகள் திருமந்திர மாலை, தேவாரத் திருப்பதிகங்கள் ஆகியவற்றின் தொடர் களையும் கருத்துகளையும் எடுத்தாண்டிருப்பதனால் அறியலாம். முப்பொருள் உண்மை : சைவ சித்தாந்தத்தில் முடிந்த முடிபாக’ கொள்ளள்ப்படும் "பதி பசு பாசம்’ என்னும் முப்பொருள் உண்மை திருவாசகத்தில் பேசப்பெறுகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/366&oldid=864492" இலிருந்து மீள்விக்கப்பட்டது