பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/367

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணிவாசகரின் சிவநெறிக் கொள்கை 349 இவற்றுள் பதி இறைவன், கடவுள். பரமான்மா எனப் படுவதும் இதுவேயாகும். பசு என்பது, ஆன்மா; உயிர். சீவான்மா எனப்படுவதும் இதுவே. பாசம் என்பது தளை; அஃதாவது உயிரைப் பிணித்துள்ள கட்டு. இக்கட்டு ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களாகும். மலங்கள் மூன்றேயாயினும், உலகிற்கு முதற்காரணமாகிய மாயை காரண நிலை காரியநிலை என இரு நிலைகளை புடையது. மாயை என்பதைக் காரண மாயையையே குறிப்பதாகக் கொண்டு அதன் காரியங்களை மாயேயம் என வேறொரு பெயரால் குறிப்பர். இப்பெயர் அசுத்த மாயை யின் காரியத்திற்கே பொருந்தும் (இம்மாயை சகலர்க்கு உரியது). ஐந்தாவது இறைவன் சக்தியாகிய திரோதான சக்தியும் ஒரு மலமாகக் கொள்ளப்பெறுகின்றது. இங்ஙனம் மலங்கள் ஐந்தாகின்றன. மும்மலம், ஐம்மலம் என வழங்கும் சைவ சித்தாந்தக் குறியீடுகளும் இருவினையொப்பு, மலபரிபாகம் முதலிய நுண்பொருள்களும் திருவாசகத்தில் இடம் பெற்றுள்ளதைக் காணலாம். இக்குறிப்புகளைக் கூர்ந்து நோக்குங்கால் வாதவூரடிகள் திருமூலர்முதல் வழி வழியாக வருகின்ற சைவ சித்தாந்தத் தத்துவக் கொள்கை களை மேற்கொண்டொழுகும் செம்புலச் செல்வர் என்பது தெளிவாகின்றது. தவிரவும், அடிகள் மாயாவாதக் கொள்கையினையும், முப்பொருள் உண்மையினையு உடன்படாமையால் அதனோ டொத்த உலோகாயதக் கொள்கையையும் வெறுத்தொதுக் கியவர். இதனை, 1. மாயாவாதம் பிரம்மம்_ஒன்றே உள்பொருள்: உலகம் வெறும் பொய்த்தோற்றமே என்பது இக் கொள்கை:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/367&oldid=864493" இலிருந்து மீள்விக்கப்பட்டது