பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/372

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

354 மாணிக்கவாசகர் இன்னும், ஆருயிரும் கருணைகக் கடலாகிய சிவமும் பொருட்டன்மையால்இருவேறுபொருள்களாதலும் சிற்றுணர் வினவாகிய உயிர்கள் தொன்மையிலிருந்தே மும்மலப்பிணிப் புடையனவாயிருக்க, முற்றுணர்வும் பேரருளும், அளவிலாற்ற லும் வரம்பிலின்பமும் உடையனாய் இயல்பாகவே பாசத் தொடர்பற்ற இறைவன், உயிர்களை மும்மலப்பிணிப் பினின்றும் விடுவித்து அவ்வுயிர்களைச் சிவமாகிய தன்னுடன் பிரிவின்றி ஒன்றும் வண்ணம் தன் அருளொளியில் சேர்த்துக் கொள்ளுதலும் ஆகிய செயல்கள் இவ்வாய்மொழிகளால் தெளிவாகின்றன. இதனால் மணிவாசகப் பெருமான் சிவனெறிக் கொள்கையினராதல் உறுதிப்படுகின்றது. மலங்களின் செயல்கள் : மலம் என்பது அழுக்கு. உயிர் களின் தூய்மையைக் கெடுத்து நிற்றலால் இப்பெயர்பெற்றது. அறிவுடைய பொருளாகிய உயிரை அறியாமையுடையதாகச் செய்வதே இதன் இயல்பாகும். ஆணவமலம் ஒன்றேயன்றிப் பல இல்லை. ஆயினும் அஃது எண்ணிறந்த சக்திகளை யுடையது. அதனால் எண்ணில்லாத ஆன்மாக்களை மறைத்து நிற்றல் அதற்குக் கூடுவதாகின்றது. எல்லா உயிர்களும் மாயையால் ஆக்கப்பட்ட உடல், கருவி, உலகு, நுகர் பொருளைப் பெற்று அவற்றின் உதவியால் அறியாமை சிறிது சிறிதாக நீங்க அறிவு விளங்கப் பெறுவன. இங்ங்ணம் உயிர் களது அறிவு விளங்குதற்குக் கருவியாய் நின்று உதவுதல் மாயையின் செயல். உயிர்கள் மலம் மாயை என்னும் இரண்டின் அகமாய் நின்று வினை செய்யுங்கால் நல்வினை, தீவினை என்னும் இருவினைகள் நிகழ்வன. இவ்வினை களால் உண்டாகும் பழக்கத்தை உயிர்களின் அறிவிற் பதியும் படி செய்தல் கன்மமலத்தின் செயலாகும். இவற்றுள் மாயை அனைவராலும் எளிதில் உணரப்படுவது; காரணம் அது பருப் பொருள். கன்மமோ இவ்வளவு எளிதாகக் காட்சியால் உணர முடியாதது; ஆனால் சிறிது நோக்கினால் உணரக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/372&oldid=864499" இலிருந்து மீள்விக்கப்பட்டது