பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3. பெருந்துறை நிகழ்ச்சிகள்

திருவாதவூரர் திருப்பெருந்துறைக்கு எந்த வழியாக வந்தார் என்பதை ஒரு புராணமும் குறிப்பிடவில்லை. இப்பொழுது ஆவுடையார் கோயில் என வழங்கும் தலமே திருப்பெருந்துறையாகும். திருப்பெருந்துறை மதுரையி விருந்து நேர்கிழக்கில் உள்ள தலம். அரசுப் பணியாக வரும் அமைச்சர் பிரமராயருக்கு எந்த விதமான தொல்லையும் இருந்திருக்காது. மெய்காப்பாளர்களும் சேவகர்களும் குதிரை மீது இவர்ந்து தம்மைச் சூழ்ந்து வர பல்லக்கிலோ அழகான இரதம் போன்ற குதிரை வண்டியிலோ பயணம் செய்திருக்க வேண்டும். நெடுந்தொலைவுப் பயணம் செய்பவர்கள் வழியில் இடைஇடையே தடாகங்களும் சோலைகளும் உள்ள இடங்களில் தங்கி இளைப்பாறிய பின்னர்தான் மீண்டும் பயணத்தைத் தொடர்வது வழக்கமாக இருந்து வருகின்றது. இன்று மகிழ்வுந்தில் செல்பவர்கள் கூட அப்படித்தானே செல்லுகின்றார்கள்? கையில் உணவுடன் செல்லுபவர்கள் இவ்வழக்கத்தைக் கடைப்பிடிப்பர் கையை வீசிக் கொண்டு


1. திருப்பெருந்துறை (ஆவுடையார் கோயில்) : இஃது அறந்தாங்கிக்குக் கிழக்கே ஏழு கல் தொலைவி லுள்ளது. இது கடற்கரையை அடுத்ததுமன்று; துறைமுகப்பட்டினமும் அன்று. உள்நாட்டிலுள்ள சிற்றுார். மாணிக்கவாசகர் காலத்தில் இது கடற் கரையை அடுத்திருந்திருக்கலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/38&oldid=1012198" இலிருந்து மீள்விக்கப்பட்டது