பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



28

மாணிக்கவாசகர்



விட்டது என்பதையும் அறிய முடிகின்றது. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையும் தாம் இயற்றியுள்ள திருப் பெருந்துறைப் புராணம் உபதேசப் படலத்தில்,

  மன்னநன் மணியே வார்த்தையாய்த் திரண்டு
     வருமொரு காரணக் குறியால் 
  அன்னமாணிக்க வாசக ரெனும்பேர்
  ஆகவின் றாதியென் றறைந்தார் 

என வரும் பாடற்பகுதியில் இக்காரணத்தைத் தெளிவாக விளக்கியுள்ளதையும் நினைவுகூர முடிகின்றது.

தித்திக்கும் மணிவார்த்தை கேட்டுமகிழ்ந்த எம்பெருமான் மாணிக்கவாசகரை நோக்கி,

  தித்திக்கும் மணிவார்த்தை இன்னஞ் சின்னாள்
     திருச்செவியில் அருந்தவும்கைச் செம்பொன் எல்லாம் 
  பத்திப்பேர் அன்பளித்துக் கவர்ந்து வேண்டும்
     பணிகொடுபாண் டியனையிவர் பண்பு தேற்றி 
  முத்திக்கே விடுத்திடவும் புத்தை வாது
     முடித்திடவும் திருவுள்ளம் முன்னம் எய்தி 
  எத்தித்தொண் டரைக்கருமம் சிறிதுண் டிங்கே
     இருத்தியென உருக்கரங்தான் அடிய ரோடும்  15
 

(புத்தை - புத்தரை தொண்டர் - வாதவூரர்; எத்தி . விரகு செய்து)

என்று கூறிவிட்டு 999 அடியார்களோடும் மறைந்தருளுகின்றார்.

குருநாதரின் பிரிவுக்கு ஆற்றாது அழுது அரற்றுகின்றார் மாணிக்கவாசகர். அரற்றிய நிலையிலும் பின்னரும் திருப்பெருந்துறையில் பல்வேறு பதிகங்களைப் பாடியருளு


15. வாதவூரடிகளுக்கு-3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/46&oldid=1012321" இலிருந்து மீள்விக்கப்பட்டது