பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெருந்துறை அருளிச் செயல்கள் 47



"புணர்ச்சிப்பத்து’ (27) "செத்திலாப்பத்து (23), பிரார்த் தனைப் பத்து (32), ஆசைப்பத்து (25) , உயிருண்ணிப்பத்து (34), திருப்புலம்பல் (39), வாழாப்பத்து (28) , எண்ணப்பத்து (44) ஆகிய திருவாசகப் பனுவல்களை நெஞ்சு நெக்குருகப் பாடிப் போற்றுகின்றார்.

===== கோயில் திருப்பதிகம் (22) ===== 5 நம்பி திருவிளையாடவில் "கோயில் பத்து" என்று கூறப்பெற்றிருப்பினும் 'கோயில், என்ற பெயர் தில்லைக்கே சிறப்பாக உரியதாயினும், ஈண்டுக் கோயில் எனக் குறிக்கப்பெறுவது திருப்பெருந்துறையில் அமைந்த திருக்கோயிலே எனக் கருத வேண்டியுள்ளது.

  செந்தழல் புரைதிரு மேனியும் காட்டி
     திருப்பெருங் துறையுறை கோயிலும் காட்டி 

என்று (திருப்பள்ளி எழுச்சி 7) என்ற அடிகளது வாய்மொழியும் "ஏயும் கோயிற்றிருப்பதிகம் பெருந்துறை தேசிகர் மோகம் இயம்பலாகும்" என வரும் திருப்பெருந்துறைப் புராணத் தொடரும் இக்கருத்தினை வலியுறுத்தும். அந்தாதியாக அமைந்த இப்பதிக்கத்தின் ஒவ்வொரு பாடலிலும் "திருப்பெருந்துறையுறை சிவபெருமானே" என வரும் தொடர் இக்கருத்தினை அரண்செய்யும். இப்பதிகத்தின் திருவுள்ளக்கிடை "அநுபோக இலக்கணம் - சிவாதுபூதிக்கு அடையாளம்' என்பதாகும். அடிகள் தாம் பெற்ற சிவாநுபவத்தைக் கொண்டு இறைவனது அருளார் இன்பத்தின் இயல்பினைப் புலப்படுத்தும் நிலையில் அருளிச் செய்யப்பெற்றது இத் திருப்பதிகம்.


5. தருமபுரப் பதிப்பில் இது திருத்தில்லையில் அருளியதாகக் குறிக்கப்பெற்றுள்ளது. இதனை அடிப் படையாகக் கொண்டு பதிப்பாசிரியர் திரு. ச. தண்டாபணி தேசிகர் இதுதில்லையிலிருந்து திருப் பெருந்துறைப் பெருமானை அடையும் குறிப்பாக அருளிச்செய்யப்பெற்றது (நூலாராய்ச்சி-பக் டு கூ) என்று எழுதியுள்ளார்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/65&oldid=1012362" இலிருந்து மீள்விக்கப்பட்டது