பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெருந்துறை அருளிச் செயல்கள் 53


 கழித்து ஆட்டுவிக்கின்ற ஐம்புலன்கள்; நாட்டுத்தேவர் - வான நாட்டில் வாழும் இந்திரன் முதலிய தேவர்கள்; சேட்டைத் தேவர் - உலகங்களைத் தொழிற்படுத்தி இயக்கும் காரணேசுவரர்கள் என்று குறிப்பனவாகும். ஏழாம் திருப்பாடலில் ' 'நமச்சிவாய'வென்று உன்னடிப் பணியாப் பேயனாகிலும் பெருநெறிகாட்டாய்” என்ற தொடர் திரு ஐந்தெழுத்து உயிர்களின் வாசனாமலத்தை ஒழிப்பதாய் இறைவனை வழிபட்டு இன்புறும் பெருநெறிக்குச் சாதன மாகும் என்ற உண்மையினைப் புலப்படுத்துகின்றது.


8. பிரார்த்தனைப் பத்து (32)

11 பிரார்த்தனை வேண்டுதல். இடையீடில்லாது சிவானந்தப் பெருங்கடலில் திளைக்கச் செய்யுமாறு வேண்டிக் கொள்ளுதல் இதன்கண் விளக்கப் பெறுகின்றது. அந்தமிலா ஆனந்தத்து அசுலாமல் எனை அழுத்தி ஆள்வாய் என்று, சிந்தை கலந்து உரைத்தலே பிரார்த்தனைப் பத்து. என்று திருப்பெருந்துறைப் புராணம் கூறும். சதா முத்தி என்பது பழைய குறிப்பு. 'ஆன்மாக் களுக்கு முத்தி நிச்சயம் பண்ணுதல் என்பது இதன் பொருள் இப்பத்தில்,

  அருளா ரமுதப் பெருங்கடல்வாய் 
     அடியா ரெல்லாம் புக்கழுந்த 
  இருளா ராக்கை யிதுபொறுத்தே
     எய்த்தேன் கண்டாய் எம்மானே 
  மருளார் மனத்தோர் உன்மத்தன்
     வருமால் என்றிங் கெனைக்கண்டார் 
  வெருளா வண்ணம் மெய்யன்பை
     உடையாய் பெறகான் வேண்டுமே (3)

11. திருவாதவூர் புராண மும் இது திருப்பெருந்துறையில் அருளிச் செய்யப்பெற்றதாகவே கூறும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/71&oldid=1012413" இலிருந்து மீள்விக்கப்பட்டது