பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54 மாணிக்கவாசகர்


 (இருள். அஞ்ஞானம், ஆக்கை உடல்; மருள்-மயக்கம்; வெருளாவண்ணம் - வெருண்டு ஓடாதபடி)

என்பது மூன்றாம் திருப்பாடல். ஒவ்வொரு பாடலும் சிவானந்தத்தில் அழுந்துவதையே வேண்டுகின்றது.

9. ஆசைப்பத்து (25)

12* :உலகப்பொருள்களிலும் வினை வாய்ப்பால் கிடைத்துள்ள பொய்யுடலின்மீதும் தமக்குள்ள ஆசையை அறவே அகற்றித் திருவருளில் தாம் கொண்டுள்ள ஆசையை நிறைவேற்றி அருளும் வண்ணம் அடிகள் தம்மை ஆட்கொண்டருளிய இறைவனை இறைஞ்சி விண்ணப்பிக்கும் பாங்கில் பரவிப் போற்றிய பத்துத் திருப்பாடல்களையுடைய இப்பதிகம் "ஆசைப் பத்து" என்ற பெயரைப் பெறுகின்றது. "ஆத்மவிலக்கணம்" என்பது பழைய குறிப்பு. ஆன்ம உருவத்தை அறிதல் என்பது இதன் பொருள். கண்ணொளி விளக்கொளியோடு கலந்து அதனோடு ஒர் உருவைக் கலந்தாலல்லது அவ்வுருவம் காணப்படாதவாறுபோல, உணர்த்த உணரும் தன்மையுடைய ஆன்மாக்கள் அருளோடு கலந்து அதனோடு சிவலிங்கத்தைப் பொருந்தினாலல்லது சிவானந்தம் சேராது என்பதனை அறிவிப்பதால் இஃது ஆன்ம இலக்கணம் என்று பெயர் பெறுகின்றது.

  கருவியுறும் ஊனுடற்கண் வாராமல் 
     திருவருளில் கலப்பதற்கே 
  அரனடியைப் புகழ்ந்துபெரு கார்வமொடு
     பாடுதலே ஆசைப் பத்தாம்

என்பது திருப்பெருந்துறைப் புராணம்.


12. திருப்பெருந்துை றயில் அருளிச் செய்யப்பெற்றதாகவே திருவாதவூர் புராணமும் கூறும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/72&oldid=1012423" இலிருந்து மீள்விக்கப்பட்டது