பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெருந்துறை அருளிச் செயல்கள் 55

 இந்தப் பத்தில்,

  அளிபுண் ணகத்துப் புறந்தோல் 
     மூடி அடியே னுடையாக்கை 
  புளியம் பழமொத் திருந்தேன்
     இருந்தும் விடையாய் பொடியாடி 
  எளிவந் தென்னை யாண்டு
     கொண்ட என்னா ரமுதேயோ 
  அளியே னென்ன ஆசைப்
     பட்டேன் கண்டாய் அம்மானே (3)

[அளிபுண் - அளிந்தபுண், பொடி - விபூதி: அளியேன் - இரங்கத்தக்கவன்.]

என்பது ஐந்தாம் திருப்பாடல். ஒவ்வொரு பாடலும் ஆசைப் பட்டேன். கண்டாய் அம்மானே' என்று இறுகின்றது: தலைப்பையும் தகுதியுடையதாக்குகின்றது.


10. உயிருண்ணிப் பத்து (34)

13 "சிவானந்தம் மேலிடுதல்" என்பது பழைய குறிப்பு. நேயம் மேலிடுதல் என்பது கருத்து. மேலிடுதல் என்பது தோய்ந்ததை அகப்படுத்தல். சிவானந்தமாகிய வெள்ளம் தோய்வதாகிய ஆன்மாவைத் தன்னகப்படுத்தி வெள்ளம் மேலிடுதல், அதாவது தன் தன்மை கெட்டு இன்ப வடிவாயிருத்தல் என்பதாம். இன்னும் விளக்கினால் பசுபோதத்தை உண்டு சிவயோதமே விளங்கித் தோன்றும் நிலை என்பதாகும். இந்த நிலையை அடிகள் தமது அநுபவத் துணைகொண்டு உணர்த்தும் முறையில் அமைந்தது உயிருண்ணிப் பத்து ஆகும். உண்ணி - உண்பது.


13. திருவாதவூர் புராணமும் இதுஇருப்பெருந்துறையில் அருளிச் செய்யப்பெற்றதாகச்செப்பும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/73&oldid=1012783" இலிருந்து மீள்விக்கப்பட்டது