பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56 மாணிக்கவாசகர்



  தழைத்துவளர் பேரின்பத் தானாகி
     யுயிர்தோன்றித் தன்மையாய்த் துன்பு 
  ஒழித்து நிறைவைப் பெறுதல்
     உயிருண்ணிப்பத்தாய்இங்கு உரைத்தாமே 

என்பது திருப்பெருந்துறைப் புராணம்.

சிவானந்த மேலீடாகிய இந்நிலையினை, "இன்பேயருளி யெனை உருக்கி உயிருண்கின்ற எம்மானே" (எண்ணப்பதிகம்3) என்ற தொடரில் அடிகள் சுட்டியருள்தலைக் கண்டு மகிழலாம். இப்பத்தில்,

  வினைக்கேடரும் உளரோபிறர் 
     சொல்லீர் வியனுலகில் 
  எனைத்தான்புகுக் தாண்டானென 
     தென்பின்புரை யுருக்கிப் 
  பினைத்தான்புகுந் தெல்லேபெருங் 
     துறையிலுறை யெம்மான் 
  மனத்தான்கண்ணி னகத்தான்மறு
     மாற்றுத்திடை யானே (4) 

என்பது நான்காம் பாடல். இறைவன் தன் ஆருயிரை அகப் படுத்திக் கொண்டருளிய திறத்தை "ஊனாருடல் புகுந்தான் உயிர்கலந்தான் உளம்பிரியான்" (2) எனவும், "கடலின் திரையதுபோல் வரு கலக்க மலமறுத்தென், உடலும் எனதுயிரும் புகுந்து ஒழியா வண்ணம் நிறைந்தான்" (6) எனவரும் தொடர்களில் காணலாம். "உயிரை விட்டுச் சிவம் பிரியாது’ என்னும் உண்மையை "என் மெய்ந்நாள்தொறும் பிரியாவினைக் கேடா" (1) என்ற தொடரில் அடிகள் குறித்துள்ளார். (சிந்தைக்கும் மொழிக்கும் எட்டாதவனாய்த் திகழும் இறைவனை மூன்றாக் திருப்பாடலில் "மனவாசகம் கடந்தான்" என அடிகள் குறித்துள்ளமை மனவாசகம் கெட்ட மன்னனை (திருமந் 2575) என்ற திருமூலரின் வாய் மொழியை நினைவு படுத்துவதாக அமைந்துள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/74&oldid=1012821" இலிருந்து மீள்விக்கப்பட்டது