பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64 மாணிக்கவாசகர்



இங்ஙணம் அடியார்களைத் தம் தெய்வமாகக் கொண்டதாக நம்மாழ்வார் அருளிய திருவாய் மொழி ஒன்றுண்டு (3,7). இதில் நம்மாழ்வார் பாசுரங்கள் தோறும் அடியார்களைத் தெய்வமாகக் கூறுவதைக் காணலாம். "பரமனைப பயிலும் திருவுடையார்...எம்மையாளும் பரமரே" (1) எனவும் "கண்ணன் எம்மான் தன்னைத் தாளும் தடக்கையும் கூப்பிப் பணியும் அவர்...பிறப்பிடை தோறும் எம்மை ஆளும் பரமரே" (2) எனவும் "எந்தை பிரான் தன்னைப் பாதம் பணிய வல்லாரைப் பணியும் அவர்...எம்மையாளுடையார்களே" (3) எனவும், "திருநாரணன் தொண்டர்...எமக்கு எம்பெருமக்களே" () எனவும், இவ்வாறாகவும் கூறுவதைக் கண்டு மகிழலாம். திருவாசகமும் திருவாய்மொழியும் ஒரு பொருளுடையவை அன்றோ?


15 திருவெண்பா(47)

மாணிக்கவாசகர் தாம் பெற்ற சிந்தையின் நிறைவாகிய சிவமே பெறுந்திருவினை. பெறாத ஏனையோரும் பெற்று மகிழுமாறு விளங்க அறிவுறுத்தும் திருப்பனுவல் இது. இதனால் இது "திருவெண்பா" என்ற அழகிய பெயரினைப் பெறுகின்றது. அறிவினால் சிவமேயாகிய அடிகளின் சிவமாந்தன்மைப் பெருவாழ்வினைத் தெரிவிப்பது பற்றி இதற்கு "அணைந்தோர் தன்மை" 16 என்று முன்னோர் கருத்துரை வரைந்தனர். தொட்டதையெல்லாம் பொன்னாக்கும் பரிசவேதியைப் போலச் சிந்தையைத் திண்டிய அளவில் சீவனைச் சிவமாக்கிய திருவருள் தன்மையை விரித்துரைக்கின்றது. இதன் உட்கருத்தை,


16 அணைந்தோர் : சிவனை சீவன்முத்தர் பரமுத்தி அடைந்தோர், உடம்பைத்துறந்து பெறும் இன் பத்தை இவர்கள் உடம்போடு பெறுகின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/82&oldid=1013227" இலிருந்து மீள்விக்கப்பட்டது