பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

! {}2

இல்லத்திற்கு வேண்டிய காசும் துா சு ம் (ஆடையும்) சால அமைத்து எங்குமுள திருப்பதி தொழும் அன்பால் சுந்தரர் புறப்பட்டார்.

முனைப்பாடி நாதனுர் (சுந்தரர்) பல பதிகளைப் பணிந்துகொண்டு ஒற்றியூர் வந்து அடைந்தார்; ஆங்கு ஓர் அணங்கின் அழகில் ஈடுபட்டவராய் அவ்வம்மையாரையும் மணந்தார். இம்மணத்தின் வரலாறு பின்பு சங்கிலியார் வரலாற்றில் கூறப்படும் விரிவை ஆண்டுக் காண்க.

ஆரூரர் திருவொற்றியூரில் பன்னுள் பயின் றிருந்த பின் திருவாரூர் வந்துற்ருர். வ ந் த வ ர், பூங்கோயில் புனிதர் தாள் போற்றிப் பரவையார் இல்லம் வரும் போது அம்மாதரார் அவரை வர வேற்க மறுத்திட்டார் காரணம், ந ம் பி ய | ர் வேருெரு பூங்கோதையைத் திருவொற்றி மாநகர்க் கண் மணந்ததேயாகும். சுந்தரர் பெருந்தகையார் மேலோர் சிலரை இப்பிணக்குத்திரப் பேச விட்டனர். அவர் போய் உரைப்பினும் ஏந்திழையார் ஏற்றிலர்.

எதை இழக்க எண்ணினும் நற்பண்புடைய மாதர்கள் தங்கள் வாழ்வைப் பிறர் கொள்ள என்றும் இசையார். இஃது அவர்கட்கு இயல்பு. அன்னர் கற்பின் திறத்தைத் தமிழ் நூல்கள் பலவாறு கழறு கின்றன. கற்புடை மாதரின் பொற்புடைச் செயலைப் புலவர் ஒருவர் புகலுங்காலே நன்கனம் நவின்றுள் ளார். அதுவே பின் வரும் செய்தியாகும்.

நண்பர் ஒருவர்க்குப் புதிதாகக் கட்டப்பட்ட சித்திரமனே புகும் அழைப்பு இதழ் அன்புடன்