பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

எடுத்து இயம்பினர். இக்கருத்தினைச் செவ்வன் அமைத்துத் திரு. மாயூரம் வேதநாயகம் பிள்ளே,

" ஓவியர்நீள் சுவர்எழுதும் ஓவியத்தைக் கண்ணுறுவான்

தேவியையாம் அழைத்திட ஆண் சித்திரமேல் யான்யாரேன் பாவையர்தம் உருவெனில் நீர் பார்க்கமனம் பொறேன்என்ருள் காவியிழி மங்கையிவள் கற்புவெற்பின் வற்புளதால் ’

என்று பாடியுள்ளார். இச்சீரிய கற்பின் திறத்தை என்னென்று இயம்புவது !

இவ்வாறு இருக்கையில் தம்மை மணந்த கன வரைப் பிறர் மணக்க எங்ங்னம் தமிழ் நாட்டு மங்கையர் சகிப்பர் ? ஆதலின், பரவையார் ஊடல் கொண்டு, நம்பியாரூரர் இல்லம் புக இடம் கொடுத் திலர். ஆரூரர் உற்ற இடத்து உதவும் ஒருவரை யன்றி இக்குறை முடிப்பார் எவரும் இலர் என்று நேரே இறைவர் திருமுன் நின்று,

நாயன் நீரே நானுமக்கிங் கடியேள் ஆகில் நீரெனக்குத் தாயின் கல்ல தோழருமாம் தம்பி சாளு ரேயாகில் ஆய வறிவு மிழந்தழிவேன் அயர்வு நோக்கி அவ்வளவும் போயில் இரவே பரவை உறு புலவி தீர்ந்த தாகும்

எனப் பணிந்தார்.

இப்பாடல் இறைவர் எவ்வாறேனும் குறை முடிக்க வேண்டும் என்பதைத் தூண்டும் முறையில் அமைந்துள்ளது. நாயன் நீரே என்பதல்ை, உம்மிலும் வேறு தலைவர் இல்லாத நீர், இதற்கு முற்படின் எதிர் மாற்றம் தருவார் எவரும் இலர்,”