பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115

உடையவர் என்பதும் அறியக் கிடக்கின்றன. மேலும்,

  • இன்சொல் இனிதீன்றல் கான்பான் எவன்கொலோ

வன்சொல் வழங்கு வது ?”

என்பதை மேற்கொண்ட வாய்மையர் என்பதும் அறிந்தோம்.

சங்கிலியார் எண்ணம் ஈடேறவோ, அன்றி யாது காரணத்தாலோ, மகட்பேச விடுத்த மன வாளன் சின்னுட்கெல்லாம் மண்ணுடு விட்டு விண்ணுடு உற்ருன். அவனது மறைவு கேட்ட மாதராரைப் பெற்றவுர் மனம் மருண்டனர் ; நம் மகள் இறையருள் பெற்றவனே மணக்க இருக்கை யில் அது பெருத இவன் விரும்பியதால் போலும் இறக்க நேர்ந்தது!" என்று கருதி, இனி ஆவன செய்வதற்கு முனைந்து நின்றனர். ஞாயிறு கிழார் இனியும் தம் திருமகளார் எண்ணத்தை எவர்க்கும் உரையாது "வாள் இருப்பின், இது போல இன்னம் பல ஏதம் நிகழும் என்று நினைத்தவராய்ச் சாதியருள் சிறந்தார் சிலர்க்குச் செப்பினர்.

திருவொற்றியூரில் சிறந்ததொரு வீ ட் ைட அமைத்தார். அவ்வில்லில் மகளாரை அமர்த்தி, ‘இனி நீ ஈண்டு விழைந்தவாறே தியாகரை வேண் டித் தியானம் புரிவாயாக, என்று வேண்டுவன செய்து விடை கொண்டு போயினர். அது கன்னி மாடமாய்க் கவினுடன் திகழ்ந்தது. அவ்வம்மை யாருடன் கன்னியர் சிலரும் உறுதுணையாய் உற்ற