பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாதரர் தொழுதேத்தும் மாண்புடையாள் 9

பகைப்பதுமாகிய அந்நிலைக்கு இயல்பாகவே துரத்தப் படுவோராகிய அவர்கள், ஒருவரையொருவர் புகழ்வாராயின், அப்புகழே பெறற்கரும் பெரும் புகழாகும்.

இராம்ன் அழகையும், சீதை அழகையும் எத்தனையோ வகையாக எடுத்து விளக்கியும் நிறைவு காணாத கம்பர், இறுதியில், "ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய்” என இராமனையும், "பெண்டிரும் ஆண்மை வெவ்விப் பேதுருவம் முலையினாளை” எனச் சீதையையும் பாராட்டிய பின்னரே அவர்களின் அழகை உள்ளவாறு உணர்த்தியதாக எண்ணினார். அம் மனநிறைவு அவர்க்கு இருந்தமையினாலேயே, சீதையின் அழகு நலம் கண்டு, அவள்பால் கறையற்ற காய்ப்புடைய ளாகிய சூர்ப்பனகை வாயிலும், "பெண் பிறந்தேனுக்கு என்றால், என்படும்!” என்ற பாராட்டே வெளிவரப் பாடிக் காட்டினார். -

உருவும் திருவும், அறிவும் ஆண்மையும், அணியும் ஆடையும் போல்வனவற்றுள், யாதேனும் ஒன்றால் ஒரு. சிறிது, தன்னினும் உயர்ந்தவர்.பால் காழ்ப்புணர்வு கொள்ளுதல், மக்கள் அனைவர்க்குமே ஒப்ப முடிந்த உள்ள இயல்பாகு மென்றால், ஆண் இனத்தை நோக்க, உறுதி தளர்ந்த உள்ளம் படைத்த பெண் இனத்தின் பால், அம் மன இயல்பு சிறிது மிகுதியாகவே காணப்படும். தீதும் நன்றும் பிற்ர்தர வாராது. அவரவர்தம் முன்னை வினைவழியே வருமாதலின்,