பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

வேந்தர் வழிபட்ட விழுமியாள்

உலகாளும் மன்னவர்கள், இறைவன் திருவுருவங் களாக மதிக்கத்தக்கவராவர் என்ற உணர்வு நிலவிய காலம் சங்க காலம்,

"முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு

இறை என்று வைக்கப்படும்." என்றார் வள்ளுவர். ஆண்டவனைக் குறிக்கும் இறை எனும் பெயரையே அரசர்க்குச் சூட்டி வழங்கினார்கள். அர்சர்களின் இயல்பு கூறும் அதிகாரத்திற்கு, வள்ளுவர், இறை மாட்சி என்றே பெயரிட்டிருப்பதும் காண்க அதற்கு விளக்கம் கூறவந்த உரையாசிரியர் பரிமேலழகர், "உலக பாலர் உருவாய் நின்று உலகம் காத்தலின் இறை என்றார்" எனக் கூறும் விளக்கத்தை யும், அதற்குச் சான்றாக அவர் எடுத்துக்காட்டும், "திருவுடை மன்னரைக் காணின் திருமாலைக் கண்டேனே என்னும்" என்ற திருவாய்மொழித் தொடரையும் காண்க. ஆகவே, அக்கால மன்னர்கள், திருக்கோயில்களில் குடிகொண்டிருக்கும் தீண்டாத்