பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 争 புலவர் கா. கோவிந்தன்

திருமேனிகளைப் போல் வணங்கி வழிபடத்தக்கவராம் நிலை பெற்றுத் திகழ்ந்தார்கள் என்பது தெளிவு. மக்களும், மக்களுக்கும் மேலானவர் என மதிக்கத்தக்க தேவர்களும் ஆண்டவனை வழிபடுவதுதான் வழக்கமே யல்லாது, அவர்களை ஆண்டவன் வழிபடுவது வழக்காறன்று. இவ்வொழுங்குமுறை, மாதேவனுக்கு நிகர் என மதிக்கத்தக்க மன்னர்க்கும் பொருந்தும். ஆகவே, மக்கள் மன்னரை வணங்குவது முறையே யல்லது, மன்னன், மக்களை வணங்குவது முறையன்று என மதித்து வாழ்ந்தார்கள் அக்கால மக்கள். அதனால், தம்மைப் பிறர் வணங்கப் பிறந்தவரே யல்லது தாம் பிறரை வணங்கப் பிறந்தவரல்லர் என்ற உணர்வு கொண்டிருந்தார்கள், ஊராளும் அரசர்கள்.

- பண்டைத் தமிழ்ப் பேரரசர்களைப் பாராட்டிய புலவர்களும் பணியாமை, பாராள்வோர்பால் பொருந்தியிருக்கத்தக்க பல்வேறு பண்புகளில் ஒன்று என்றே மதித்துப் பாராட்டியுள்ளார்கள். செல்வக் கடுங்கோ வாழியாதனைப் பாராட்டிய புலவர் கபில்ர், அவன் "பணியா உள்ளத்தையும், "வணங்கா ஆண்மை யையும்” கண்டு பாராட்டியுள்ளமை காண்க (பதிற்றுப் பத்து: 63, 70. அத்தகைய பணியா உள்ளம் வாய்க்கப் பெற்ற அச் செல்வக்கடுங்கோ வாழியாதன், யாரை யேனும் பணிந்திருப்பன் என்றால், ஒதல் முதலாம் ஆறு ஒழுக்கங்களாலும் உயர்ந்த உரவோராகிய பார்ப் பாரையே. பணிந்திருப்பன். அவர் ஒழிந்த பிறர், எத்துணை உயிர்ந்த நிலையினராயினும், அவர்களைப்