பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாதரர் தொழுதேத்தும் மாண்புடையாள் இ 103

பணிந்தறியான், செல்வக்கடுங்கோ வாழியாதனின் இந்தச் சிறப்பே, கபிலரைப் பெரிதும் கவர்ந்துவிட்ட மையால், அது கூறி அவனைப் பாராட்டியுள்ளார்: "பார்ப்பார்க்கு அல்லது பணிபு அறியலையே; பணியா உள்ளமொடு அணிவரக் கெழீஇ"

- பதிற்று. 63: 1-2 பதிற்றுப்பத்தில் ஐந்தாம் பத்தினைப் பாடிச் சேரன் செங்குட்டுவனைப் பாராட்டும் பெரும்புலவர் பரணரும், செங்குட்டுவனின், "வணங்கா ஆண்மை" யினையே வாயாரப் புகழ்ந்துள்ளார் (பதிற்று. 48. கண்ணகி வரலாறு கூறுமுகத்தான், உடன்பிறப்பாள னாம் செங்குட்டுவன் வரலாற்றை உலகறியப் பண்ணிய இளங்கோவடிகளாரும் செங்குட்டுவனின் "இறைஞ்சாச் சென்னியின்” இறப்ப உயர்ந்த சிறப்பையே எடுத்துக் கூறிப் பாராட்டியுள்ளார் (சிலம்பு. 26 54).

பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெரு 'வழுதியைப் பாராட்டிய காரிகிழார், அவனை வாழ்த்துங்கால், முற்றத்துறந்த முனிவர்களாலும் வணங்கத்தக்கோனாகிய முக்கட் செல்வனாம் சிவன் உறையும் திருக்கோயில் வலம்வரும் காலைமட்டும் உன் வெண்கொற்றக்குடை பணியுமாக! நான்மறை வல்ல நல்லோர் உன் எதிர்வந்து, தம் வலக்கையை உயர்த்தி, "வாழ்க பல்லாண்டு வழுதி!” என வாழ்த்துரை வழங்கும் காலத்து உன் தல்ை மட்டுமே, அவ் வாழ்த்துகளை ஏற்றுக்கொள்வான் வேண்டி வணங்கு மாக!" எனக் கூறி, வழுதியின் வணங்காப் பெருமையே விளங்கப் பாடியுள்ளார். . -