பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 ஒ புலவர் கா. கோவிந்தன்

"பணியியர் அத்தை, நின்குடையே, முனிவர்

முக்கட்செல்வர் நகர்வலம் செயற்கே! இறைஞ்சுக பெரும! நின் சென்னி, சிறந்த நான்மறை முனிவர் ஏந்து கை எதிரே" - புறம். 6.

இவ்வாறு பாராட்டத்தக்க தம் பண்புகளுள், தலையாயது பணியாமைப் பண்பாம் எனக் கருதும் பெருமித வுணர்வுடையராகிய மன்னர் குலத்தவரை யும், தன் தாள் பணிய வைத்த தனிச் சிறப்புடையவள், மனிதருள் மாணிக்கமாம் கண்ணகி.

தமிழ் நாடாண்ட மூவேந்தர்களுள், முதற்கண் வைத்து மதிக்கத்தக்க சேரர் குலத்தில் வந்தவன் செங்குட்டுவன். .

"ஆணேறு ஊர்ந்தோன் அருளில் தோன்றி

மாநிலம் விளக்கிய மன்னவன்." - சிலம்பு. 30: 141-142. என்பதற்கு ஏற்ப, தான் பிறக்க அருட்டுணை புரிந்த காரணத்தால், சிவபெருமான் ஒருவனுக்கு மட்டுமே தலைவணங்கும் தன்னிகர் அற்றவன் அச் செங்குட்டுவன். முப்பெருங் கடவுளருள் ஒருவனாகவும், காக்கும் தொழில் உடைமையால் நாடு காவல் தொழிலினராகிய மன்னர்குல முதல்வன் என மதிக்கத் தக்கவனுமாகிய திருமாலுக்கும் தலைவணங்காது. அவன் சேடத்திற்குத் தன் தோளிடமே தரும் மனம் உடையவன் என இளங்கோவடிகளாரால் சிறப்பிக்கப் படுபவன் அச் செங்குட்டுவன்.

"நிலவுக் கதிர் முடித்த நீளிருஞ் சென்னி

உலகுபொதி உருவத்து உயர்ந்தோன் சேவடி