பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள் 105

மறஞ்சேர் வஞ்சி மாலையொடு புனைந்து இறைஞ்சாச் சென்னி இறைஞ்சி வலங்கொண்டு மறையோர் ஏந்திய ஆவுதி நறும்புகை நறைகெழு மாலையின் நல்லகம் வருத்தக் கடக்களி யானைப் பிடர்த்தலை ஏறினன்; குடக்கோக் குட்டுவன் கொற்றம் கொள்கென ஆடக மாடத்து அறிதுயில் அமர்ந்தோன் சேடம் கொண்டு சிலர் நின்று ஏத்தத், தெண்ணிர் கரந்த செஞ்சடைக் கடவுள் வண்ணச் சேவடி மணிமுடி வைத்தலின், ஆங்கது வாங்கி அணிமணிப் புயத்துத் தாங்கின னாகித் தகைமையிற் செல்வுழி".

- சிலம்பு. 26: 54-67

அத்தகையானைத் தன் திருவுருவம் சமைத்தற் காம் கல்லை, வடவாரியரை வென்று, வடபேரி மயத்துக் கொண்டு, கங்கைப் பேரியாற்றில் நீராட்டி, அவ் வடவாரிய மன்னர் தலைமீதே ஏற்றிக் கொணர்ந்தும், தனக்கு ஒரு கோயில் அமைத்தும், அக்கோயிலகத்தே தன் திருவுருவை நிலைநாட்டி, பல நாட்டு மன்னரோடும் கூடி, விழாவெடுத்தும் வணங்கி வழிபடப் பண்ணினாள் கண்ணகி. -

தமிழ் நாடாண்ட மூவேந்தவர்களுள், ஒரு குலத்தவர் விரும்பிச் செய்வதை, ஏனைய இரு குலத்தவரும் வெறுத்து ஒதுக்குவதே வழக்கமாம் என்றாலும், கண்ணகிக்குக் கோயில் கட்டி வழிபாடு மேற்கொள்வ்தில் மட்டும், மூவரும் ஒத்த உள்ளத்தராயிருந்தனர்; செங்குட்டுவன் தாய் நற்