பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள் ஆழ் 107

கொலைக்குக் காரணமாயிருந்ததும், அவள் சினத்தீப்பட்டு அழிவுற்றதுமாகிய பாண்டிநாட்டுக் காவலன், அதிலும், அவள் காரணத்தால் இறந்துபோன மன்னனின் மகன், அவளை வணங்கி வழிபாடு செய்தான் எனில், அது அவளின் அளக்கலாகாப் பெருமைக்கு எடுத்துக்காட்டாகு மன்றோ!

கோவலனுக்குக் குற்றம் இழைத்துக் கோல் கோடியமை கண்டு உயிர்துறந்த நெடுஞ்செழியன் மகனாய், தந்தை மதுரையிலிருந்து அரசாண்ட காலத்தில், தென்பாண்டி நாட்டின் தலைநகரும் பாண்டி நாட்டின் வளங்கொழிக்க உதவும் வாணிகப் பொருளாம் முத்துவிளை துறையுமாகிய கொற்கை யிலிருந்து அரசாண்டு வந்த வெற்றிவேற் செழியன், தந்தைக்குப் பிறகு மதுரைபோந்து அரசாண்டிருந்த காலத்து, பாண்டி நாடு பத்தினிக்கு இழைத்த கொடுமையால் மழைவளம் இழந்து வறுமை மிகுந்து வாடுவது கண்டு பாண்டித் தலைநகரில் பத்தினிக்கு விழாவெடுத்து, பொற்கொல்லர் ஆயிரவரைக் கொன்று வேள்வி செய்தான்; அதனால் கண்ணகி சினம் தணிய நாடு மழை பெற்றுப் பசியும் பிணியும் நீங்கி, வசியும் வளனும் பெருகிற்று, --

"கொற்கையில் இருந்த வெற்றிவேற் செழியன் பொற்றோழில் கொல்லர் ஈரைஞ் நூற்றுவர் ஒருமுலை குறைத்த திருமா பத்தினிக்கு ஒருபகல் எல்லை உயிர்ப்பலி ஊட்டி உரைசெல வெறுத்த மதுரை மூதூர் அரைசு கெடுத்து அலம்வரும் அல்லற்காலைத்