பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 இ. புலவர் கா. கோவிந்தன்

தென்புல மருங்கில் தீதுதிர் சிறப்பின் மன்பதை காக்கும் முறைமுதல் கட்டிலின் நிரைமணிப் புரவி ஓர்ஏழ் பூண்ட ஒருதனி ஆழிக் கடவுள் தேர்மிசைக் காலைச் செங்கதிர்க் கடவுள் ஏறினன்என மாலைத் திங்கள் வழியோன் ஏறினன்."

- - - சிலம்பு. 27; 127-138. செங்குட்டுவனும், வளவன்கிள்ளியும், வெற்றி வேற் செழியனும் கண்ணகியைப் பத்தினித் தெய்வ மாக்கி வழிபாடு செய்தனர் என்றால், இவரெல்லாம் தமிழகத்தவர், தமிழகத்துப் பெண்ணைத் தமிழகத்து அரசர்கள் பாராட்டியதில் பெருமையில்லை; "மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்

சொல்வதிலோர் மகிமை இல்லை; திறமான புலமையெனில் வெளிநாட்டார்

அதை வணக்கம் செய்தல் வேண்டும்." என்பதற்கேற்ப, அவளை வேற்று நாட்டவர், வேற்று மொழியினர் பாராட்டியிருப்பராயின், அதுவே அவள் பெருமைக்கு அளவுகோலாம் என்று எண்ணுவதாயின், அந்தப் பெருமையும் அவளுக்கு வாய்த்திருந்தது. - தமிழகத்து மூவேந்தரைப் போலவே, மவுரியப் பேரரசன் அசோகன் ஆட்சிக்கு அடிபணியாது தனியரசு அமைத்து ஆண்டவரும், தொடக்கத்தில் துளுநாடு என்ற எல்லை குறுகிய நாட்டவராய் இருந்து, தமிழகத்துப் பேரரசர்களெல்லாம் அஞ்ச, தமிழகத்து அரசியலில் பெரும்பங்கு கொண்டு, இறுதியில், அப்பேரரசர் படையில் பணியாற்றியவரும், சொல்