பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாதரர் தொழுதேத்தும் மாண்புடையாள் இ 109

தவறாச் சிறப்புடைமையால் "வாய்மொழிக் கோசர்" எனவும், "ஒன்றுமொழிக் கோசர்" எனவும் பாராட்டப் பெற்றவருமாகிய கொங்கிளங்கோசர், செங்குட்டுவன், வஞ்சிமாநகரில் எடுத்த விழாவுக்கு வந்து, வழிபட்ட தோடு, தங்கள் துளுநாட்டிலும், விழாவும் சாந்தியும் செய்து மழை வளம் பெற்று மகிழ்ந்தார்கள். "அது கேட்டுக் கொங்கிளங்கோசர் தங்கள் நாட்டகத்து நங்கைக்கு விழவொடு சாந்தி செய்ய மழை தொழில் என்றும் மாறாதாயிற்று” என்ற உரைபெறு கட்டுரை காண்க.

சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குச் சிலை அமைத்தற்காம் கல் கொணர்வான் வேண்டி, வடநாடு சென்ற காலை, அவனும் அவன் படையும் கங்கையைக் கடக்க உதவியவனும், அக்காலை வடநாடு முழுவதும் வெற்றி விளங்க அரசாண்டு வந்த ஆந்திரப் பேரரசர் மரபில் வந்து, கீழைமாளுவ நாட்டிலிருந்து ஆட்சி புரிந்தவனும், வடமொழியில் சதகாணி என வழங்கப் படுவோனும் ஆகிய நூற்றுவர் கன்னர் என்பான், செங்குட்டுவன் வஞ்சிமாநகரில் கொண்டாடிய விழாவுக்கு வந்திருந்ததோடு அமையாது, கண்ணகிப் பெருந்தெய்வமே! செங்குட்டுவன் ஈண்டெடுக்கும் இவ்விழாவில் வந்து சிறப்பித்தது போலவே, எங்கள் நாட்டகத்து யாங்கள் எடுக்கும் விழாவிலும் வந்து கலந்து கொள்ள வேண்டுகிறோம் என வேண்ட, கண்ணகியும் தந்தேன் வரம் எனத் தன் மாளுவ தேசத்தும், அவளுக்குக் கோயில் எடுத்து விழர்க் கொண்டாடினான். மாளுவ தேசத்தின் கீழ்ப் பகுதியில்,