பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 ஆழ் புலவர் கா. கோவிந்தன்

நாகோட் மாவட்டத்தைச் சேர்ந்த மலைநாட்டுப் பகுதிகளில், பதைனிதேவி எனும் பெயரோடு காணப் படும் கோயில்கள், மாளுவ மன்னன் கண்ணகிக்கு எடுத்த பத்தினி தேவிக் கோயில்கள் ஆம்.

செங்குட்டுவன் திறம் அறியாது இழிமொழி வழங்கி நகையாடியதன் காரணத்தால், அவனால் தாக்குண்டு, அவனுக்குத் தோற்று, அவன், கண்ணகிச் சிலைக்கு எனத் தேர்தெடுத்த கல்லைச் சுமந்து வந்து தமிழகம் சேர்த்து, கண்ணகிக்கு எடுத்த விழாக் காரணமாகச் சிறை வீடு செய்யப் பெற்ற வடவாரிய மன்னர்களும், அவ்விழாவில் கலந்துகொண்டு, அவளடி பணிந்ததோடு, அவளைத் தங்கள் நாட்டகத்தும் விழாக் கொண்டு வணங்கிப் பயன் கொண்டார்கள்.

இவ்வாறு, இமயம் முதல் குமரிவரை பரவிய பெருநிலப்பரப்பில் கோலோச்சியிருந்த கோமகன் களால் வணங்கப்பெற்ற கண்ணகி, கடல் கடந்த நாட்டினராலும் கற்புடைத் தெய்வமாகப் போற்றப் பட்டுளாள். "கடல்சூழ் இலங்கையை கி. பி. இரண்டாம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தில் ஆண்டவனும், ஒருநாள் நள்ளிருள் யாமத்தில் நகர் சோதனை செய்து வருகின்ற போது நரைத்த முதுமகள் ஒருத்தி, உரத்த குரல் பாய்ச்சி அழக்கேட்டு, அவள் மனையடைந்து, அன்னவள் இன்னலுக்குப் பன்னெடுங் காலத்துக்கு முன்னர் ஈழ நாட்டின்மீது படையெடுத்துப் போந்த கரிகாற் பெருவளத்தான், சிங்களக் குடிகள் பலவற்றைச் சிறைப்படுத்திச் சென்றபோது, தன் குடிக்கு ஒரு