பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 ©. புலவர் கா. கோவிந்தன்

தாண்டு பாராட்டியுள்ளார், தாம் பாடிய மணிமேகலையில்:

"தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய்எனப் பெய்யும் பெருமழை என்ற அப் பொய்யில் புலவன் பொருளுரை தேறாய்."

- மணி. 22 59-61

இவ்வாறு இயற்கையையும், இயற்கைக்கும் மேலான இறைவனையும் ஏவல்கொண்ட பத்தினிமார் பலரைப் பெற்றெடுத்த பெருமைக்குரிய புகார் நகரத்தில் பிறந்த கண்ணகிபால், அவ்வாற்றல் அமைந்து கிடந்ததில் வியப்பேதுமில்லை.

தன் மனம் விரும்பும் கணவனைப் பொய்க்குற்றம் சாட்டிக் கொலை செய்துவிட்டான், பாண்டியன் நெடுஞ்செழியன். கோவலன் குற்றம் அற்றவன்தான்; ஆனால், அதை உண்ர்த்தும் வாய்ப்பு அவனுக்கு அளிக்கப்படவில்லை. அதனால், அந்தக் கடமை அவன் மனைவியாம் தன்னுடையதே என உணர்ந்தாள். அவ்வாறே அரசவை புகுந்து, குற்றமற்றவன் கோவலன்: குற்றம் புரிந்தவன் கோமகனே என்பதை - ஐயமற நிலைநாட்டினாள். குற்றம் உணர்ந்த கோமகனும், உயிர்துறந்து உயர்ந்தோனாயினன். ஆனால், அதுகண்டும் கண்ணகி சினம் தணிந்திலது. குற்றம் புரிந்தவன். கோமகன், குற்றம் உடையான் கோலின்கீழ் வாழ்வோரும் குற்றம் உடையவராகவே இருப்பர். ஆகவே, குற்றம் புரிந்த மன்னவன் உயிரிழந்தது மட்டும் போதுமானதன்று அவன் கோற்கீழ் வாழ்வோரும்