பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாதரர் தொழுதேத்தும் மாண்புடையாள் இ 17

குற்றத்தின் தண்டனைக்கு உள்ளாகல் வேண்டும். குற்றம் புரியா என் கணவனைக் கொன்ற மன்னவனுக்குரிய மாநகரம், இம் மதுரை மாநகரம். ஆகவே, அவன்மீது சென்ற என் சினம், அவன் மாநகர் மீதும் சேறல் முறையே, அடாது செய்த அவன் அழிந்ததுபோல், அவனுக்குரிய இம்மாநகரும் அழிவுறுதல் வேண்டும். ஆகவே, இம் மாநகரை அழிப்ப தால் என்மீது குற்றம் சாட்டல் முறையாகாது எனத் துணிந்து, மதுரை மாநகர்க்குத் தீயிட்டாள்; தீமுண்டு. கொண்டது. -

"யான் அமர் காதலன் தன்னைத் தவறிழைத்த கோன்நகர் சிறினேன் குற்றமிலேன் யான்." -

- சிலம்பு. 21: 41-42

மதுரை மாநகர், தவறிழைத்த மன்னவனுக்குரியதே என்றாலும், அவ் மாநகர் வாழ்வார் அனைவருமே தவறிழைத்தவராகிவிடார். ஒரு சில நல்லோர்களும் ஆங்கு இருத்தல் கூடும். அவரையும் உயிரிழக்கப் பண்ணுவது அறமாகாது. ᏑjöᏡᏡᎢᎧᎫ☾❍ ☾Ꭲ இழந்த கலக்கத்தால், அதைக் கண்ணகி மறந்துவிட்டாள். ஆனால், அவள் ஏவ, மதுரையைப் பற்றி எரிக்கத் தொடங்கிய அங்கியங் கடவுள், அப்பழி அவளுக்கு உண்டாதல் கூடாதே என்ற எண்ணத்தால், அவள் முன்தோன்றி, பணிந்து நின்று, "பத்தினித் தெய்வமே! உன் ஏவல் மேற்கொண்டேன்; ஆனால், ஒர் ஐயம்; இம் மதுரையில், உன் சினத் தீக்குத் தப்பி உயிர்வாழ வேண்டியவ்ர் யாரேனும் உளரோ? உளராயின், அவர்