பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 புலவர் கா. கோவிந்தன்

யாவர் என அறிவிக்க வேண்டுகின்றேன்” என்று வினவ, அவள், "பார்ப்பார், அறவோர், பசு, பத்தினிப் பெண்டிர், மூத்தோர். குழுவி எனும் இவர்களை விட்டுத் தீயோர்களை மட்டுமே திண்டி அழிப்பாயாக!” எனப் பணிக்க, அவள் பணித்தவாறே, அந்நல்லோர் உறையுளை நணுகாது, தீயோர் உறைவிடங்களை மட்டுமே தேடித் தீய்த்து ஒழித்தது. இவ்வாறு எரியும் ஏவல் கேட்கப் பணிகொள்ளும் அப் பத்தினித் தெய்வத்தின் பெருமைதான் என்னே! -

"மாலை எரியங்கி வானவன் தான்தோன்றி

மாபத்தினி! நின்னை மாணப் பிழைத்தநாள் பாயெரி இந்தப் பதியூட்டப், பண்டே ஒர் ஏவல் உடையேனால் யார் பிழைப்பார் ஈங்கு

என்னப், பார்ப்பார், அறவோர், பசு, பத்தினிப் பெண்டிர், மூத்தோர், குழவி எனும் இவரைக் கைவிட்டுத் தீத்திறத்தார் பக்கமே சேர்கென்று காய்த்திய பொற்றோடி ஏவப், புகை அழல் மண்டிற்றே, நல்தேரான் கூடல் நகர்." - சிலம்பு. 21: 49-57.

இவ்வாறு, கண்ணகியின் ஆணைக்கு அடங்கி அவள் ஏவல் கேட்ட இயற்கைகளே யல்லாமல், அவள் துயர் நிலைக்கு இரங்கிய இயற்கைகளும் உள என்கிறார், ஆசிரியர் இளங்கோவடிகளார். . -

எயினர் சேரியைச் சேர்ந்த ஐயை கோட்டத்து வரிப்பாட்டும் கூத்தும் முடிய, மதுரை நோக்கிப் புறப்படத் துடித்தான் கோவலன். ஆனால், உடன்வரும் கவுந்தி அடிகள், வேனிற்காலத்து ஞாயிற்றின் கதிர்,