பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள் 4. tis

கண்ணகியால் தாங்கிக்கொள்ளலாகாக் கொடுமை, யுடையதாகும். மேலும், பாண்டியன் செங்கோல் சிறப்பால், அவன் நாட்டுக் கொடுவிலங்குகளும் கொடுமை செய்யா; ஆகவே, இரவு வந்ததும் வழிமேற் கொள்வோம் என்று கூற, மூவரும் ஞாயிற்றின் மறைவினை எதிர்நோக்கி இருந்தார்கள். அவ்வாறே ஞாயிறு மறைய, திங்கள், தன் விண்மீன் கூட்டங் களோடு எழுந்து பால் போலும் குளிர்வெண் நிலவைப் பொழியத் தொடங்கிவிட்டான். அம்மட்டோ! மலய மலையில் பிறந்து அம் மலைச் சந்தன மணத்தை யெல்லாம் வாரிக்கொண்டு, மதுரையுட் புகுந்துவரும் தென்றலும் மெல்ல வீசத் தொடங்கிவிட்டது. பகற் போதில் தொழில் புரிந்தலைந்த உயிரனைத்தும் உறையுள் புகுந்து அடங்கலாயின. அது, அடிகள் இளங்கோவுக்கு, பகலெல்லாம் விழித்திருந்த நிலமகள், இரவுவர உறங்கப் போவதாகத் தோன்றியது. அவ்வாறு உறங்கப்போகும் நிலமகள், திங்களின் தண்ணொளியும், குளிர் தென்றலும் கண்ணகி மேனின்ய, ஆரத்தழுவு வதையும், ஆனால், அதுபோலும் தழுவலை என்றும் பெற்றுப் பயின்றறியாக் கண்ணகி, அத்தழுவலுக்கு நாணி நடுங்குவதையும் கண்ணுற்றாள். இது முதுவேனிற்காலம். கடந்துபோன இளவேனிற் காலத்தில், கோவலன் கண்ணகியை மறந்து, மாதவி மனையில் வாழ்ந்திருந்தான். அதனால், நொந்து துறவுள்ளம் உடையவளாகிவிட்ட கண்ணகி, மகளிர்க்கு இயல்பாக இன்பந்தருவனவாகிய எதிலும், ந்ாட்டங் கொண்டிலள். மார்பில் மனக்கும் சந்தனக் குழம்பைப்