பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9

பாராட்டிய சமயங்கள்

கண்ணகி வாழ்ந்த கடைச்சங்க காலம், தமிழ்கத்தில் பல்வேறு சமயங்களும் ஆழ வேரூன்றிப் பரவியிருந்த காலமாகும். சிவனை வழிபடு கடவுளாகக் கொள்ளும் சைவம், திருமாலை வழிபடு கடவுளாகக் கொள்ளும் வைணவம், அருகனை வழிபடு கடவுளாகக் கொள்ளும் சமணம், புத்தனை வழிபடு கடவுளாகக் கொள்ளும் பெளத்தம் ஆகிய நாற்பெரும் சமயங்களும் தத்தம் பெருமைகளைப் படியாத மக்கள் உள்ளத்திலும் பதியவைக்க வேண்டும் என்ற வேட்கை மிகுதியால், அவற்றை விளக்கும் பழங்கதைகளை, ஒன்றையொன்று விஞ்சும் வகையில் பாடிப் பாராட்டிக்கொண் டிருந்தன. இந்நாற்பெரும் சமயங்கள், தமிழகத்துப் பேரூர்களில் ஆட்சி புரிந்துகொண்டிருந்த அதே காலத்தில், தமிழகத்து எண்ணிலாச் சிற்றுார்களில், கொற்றவை வழிபாடு போலும் சிறு தெய்வ வழிபாட்டுச் சமயமும் குடிகொண்டிருந்தது. பால், வெண்மை எனும் ஒரு வண்ணமே உடையதாயினும், அப் பால் தரும் ஆக்கள் வேறு வேறு வண்ணம் உடையவாதல் போல், சமயங்களின் முடிவு ஒன்றே