பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 ல் புலவர் கா. கோவிந்தன்

யாயினும், அம் முடிவை egijбUDI.-III மக்கள் மேற்கொண்டு ஒழுகிய சமய நெறிகள் இவ்வாறு பலப் பலவாயின. அச் சமயங்கள் பலவும் இறுதியில் தாம் எய்தும் முடிவு ஒன்றே என்பது கொண்டு, ஒன்றுபட்டு உறவாடிப் பழகுவதற்கு மாறாக, ஒன்றை யொன்று அழித்து ஆட்சிகொள வேண்டும் என்ற பகையுணர்வே உடையவாகி, ஒன்றையொன்று இழிப்பதும், பழிப்பதும் மேற்கொண்டிருந்த காலம் அக்காலம். -

- இவ்வாறு தம்முள்ளே மாறுபட்டு ஒன்றை யொன்று பழிப்பதும் இழிப்பதுமாயிருந்த அச் சமயங்கள் அனைத்தும், கண்ணகியைப் பாராட்டும் வகையில் ஒருமைப்பாடுடையவாய்த் திகழ்ந்தன.

கங்கைச் சடைமுடிக் கண்ணுதல் அருளால் பிறந்து அவன் பெருமை பாராட்டும் சைவ சமயநெறி தழுவி, தன் மணிமுடி மீது அப்பெருமான் பொன்னடி தாங்கி நின்றமையால், ஆடக மாடத்து அரவணைக் கிடந்த திருமாலின் சேடத்தைத் திருமுடிக் கொள்ளாது தோள்மீது கொண்ட செங்குட்டுவன், கண்ணகி சிலைக்காம் கல் கொணரவென்றே வடநாடு சென்று, அந்நாட்டு வேந்தர். பலரை வென்று, அவர் தலைமீதே கல் ஏற்றிக் கொணர்ந்து சிலை அமைத்து வழிபாடு ஆற்றிய நிகழ்ச்சியும், குன்றக் கரவை பாடிக் குமர வேளை வழிபடுவோராகிய குரவர், கான நறுவேங்கைக் கீழ் நின்ற கண்ணகியின் கற்புக் கோலம் கண்ட அளவே குரவை மறந்து, அவளை ஏத்திப் பாடிய நிகழ்ச்சியும் சைவ சமயத்தாலும் போற்றத்தக்க பொற்கொடியாய்ப் பொலிவுற்றாள் கண்ணகி என்பதைப் புலப்படுத்தி யிருப்பது காண்க. . - . . .