பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள் இ. 125

திருமால், திருவரங்கத்தில் பாம்பணைப் பள்ளி மீது பாயல் கொண்டிருக்கும் திருக்கோலத்தினையும், வேங்கடத்து உச்சிக்கண், ஐம்படை ஏந்திநிற்கும் திருக்கோலத்தினையும் கண்டு களிக்கும் ஆர்வமே முன்னிற்கக் கன்னித் தமிழ் நாட்டினைக் கால் நடையாகவே கடந்து வரும் மாங்காட்டு மறையோன், வேனில் வெம்மை மிக்க போதில், பாலை எனும் பாழ்நிலத்தினூடே, கணவனைத் தொடர்ந்து கால் கடுக்க நடந்துவரும் கண்ணகியின் நிலை கண்டு கண்ணிர் உகுத்துக் கசிந்துருகும் காட்சியும், திருமால் சீர்கேளாத செவி, செவியாகாது, கண்ணனைக் காணாத கண், கண் ஆகாது, நாராயணா என ஏத்தாத நா, நா ஆகாது, என்ற நினைப்பு உடையவராகிய ஆய்ச்சியரும், அவர்தம் தலைவியாம் மாதரியும் கண்ணகியைப் பாராட்டும் பண்பும் வைணவ சமயத் தாலும் வழிபடத் தக்க விழுமியோளாய் விள்ங்கினாள் கண்ணகி என்பதை விளக்கி நிற்றல் உணர்க.

சமண சமயத்தனாய் இரவு உண்ணா நோன்பு உடையனாய இல்லறத்தானுக்கு இட்டு வழங்கும் சாவக நோன்பி' என்னும் சிறப்புப் பெயரினை, இளங்கோவடிகளாரால் சூட்டப்படுமளவு சுத்த சமணனான கோவலன், கண்ணகியைக் "கற்பின் கொழுந்தே! பொற்பின் செல்வி!” எனப் போற்றி, முடித்திருக்கும் பாராட்டு வாழ்த்து மடலும், அருக தேவனின் திருமொழி அல்லது பிறமொழி கேளாக் காதும், அவன் திருப்பெயர் அல்லது பிறர் பெயர் பழகா நாவும், அவன் திருவடிவம் அல்லது பிறவடிவம்