பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 ஒ. புலவர் கா. கோவிந்தன்

காணாக் கண்ணும், அவனுக்கு அல்லது பிறர்க்குப் பணிபுரியா மெய்யும், அவனை வணங்கவல்லது பிறரை வணங்கக் குவியாக் கையும், அவன்தாள் அல்லது பிறர் தாள் வணக்காத் தலையும்,அவன் புகழ்க்கல்லது பிறர் புகழ்க்கு நெகிழா நெஞ்சும் கொண்ட அழுந்திய சமண அடிகளாய்த் தம் பெயரால் ஒரு பள்ளி அமைத்துச் சமயப் பணியாற்றி வந்த கவுந்தி, கண்ணகிக்குத் துணையாதல் கருதியே காட்டு வழியைக் கடக்கத் துணிந்ததோடு,

"கற்புக் கடம்பூண்ட இத்தெய்வ மல்லது

பொற்புடைத் தெய்வம் கண்டிலேன்"

எனக் கூறிய துணிவுரையும், அரசு வெறுத்து அருளறம் மேற்கொண்டு குணவாயிற் கோட்டத்தில் கோயில் கொண்டிருந்த இளங்கோவடிகளார், கண்ணகியின் வரலாற்றினை உலகோர்க்கு உணர்த்துவதற்கென்றே கன்னித்தமிழில் ஆக்கிய கற்கண்டு நிகர் காப்பியமும், கண்ணகி, சமண்மும் சீர்பாடும் சிறப்புடையவளாய் வாழ்ந்தாள் என்பதற்குக் சாலச்சிறந்த சான்றுகள் ஆகாவோ? - -

மாதவர் உறையும் பெளத்தப் பள்ளி அடைந்து, அப்பள்ளி ஆசிரியர் அறவண அடிகள்பால் ஐவகைச் சீலத்து அமைதி கேட்டு, அறவழி மேற்கொண்ட மாதவி, கண்ணகியை, "கணவற்கு உற்ற கடுந்துயர் பொறாது காவலன் பேரூர்க் கனையெரி மூட்டிய மாபெரும் பத்தினி” எனப் பாராட்டியதோடு நில்லாது, மணிமேகலை தான் பெற்ற மகளே ஆயினும், அவளைக் கண்ணகி பெற்ற மகளாகவே மதித்து, அவளை, தன்குல