பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 ஆ. புலவர் கா. கோவிந்தன்

"அவளுந்தான் - கண்ணகி என்பர்ள் மன்னோ” (சிலம்பு 1: 25-29) எனக் கண்ணகியை முன்னும், "அவனுந்தான் - கோவலன் என்பான் மன்னோ”

(சிலம்பு 1: 35-39) எனக் கோவலனைப் பின்னுமாகவே அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

  • , இவ்வாறு அறிமுகம் செய்துவைக்கும் நிலையிலேயே, கண்ணகி கோவலர்க்கிடையே, அவ்வேற்றத் தாழ்வு இடம்பெறச் செய்து, கண்ண்கிக்கு ஒரு பெருமை சூட்டிய ஆசிரியர் அடிகளார், அவ்விருவர்தம் பண்பு பாராட்டும் நிலையில், கண்ணகியைப் புகழ் ஏணியின் உச்சிக்கே கொண்டு சென்று நிறுத்திவிட்டார். கோவலனைக் கூறுங்கால், "உலகனைத்தையும் ஒரு குடைக்கீழ் வைத்தாளும் சோழர்குலப் பேரரசர்களால் முதற்கண் வைத்துப் பாராட்டப்பெறும் முதுபெரும் குடிகளில் வரம்பின்றிப் பெருகிய வளம் படைத்தவனும், அறம் பிறழா வாணிகத்தின் விளைவால் வரும் விழுநிதிகளை வறியோர்க்கும் வருவோர்க்கும் வழங்கி வாழ்வளிக்கும் வளமார் உளம் படைத்தவனுமாகிய மாசாத்துவான் மக்ன் பதினாறு ஆண்டிற்கு உட்பட்ட பிராயம் உடையான் பரந்தகன்ற இப்பாருலகமும் சிறிது எனக் கருதுமளவு பரந்து பெருகிய புகழ் உடையவன். அவன் மீது தாம் கொண்ட காதலால், மதிநிகர் முகம் படைத்த மங்கையர், யாழைப் பழித்த மொழியினராம் தம் ஆயத்தாரிடையே, உருவற்ற தன் நிலையைக் கைவிட்டு, உலகோர் கண்டு பாராட்டும் உருவுகொண்டு