பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள் * 129

ஏராளமாகக் கொண்டு, ஆணைமேல் ஆணைகள் இட்டு அவர்களை ஆட்சி புரியவும், எண்ணிய இடங் &$☾ᏡᎧiᎢ எண்ணிய பொழுதில் அடையவல்ல ஊர்திகள்மீது அமர்ந்து உலாவரவும் உதவும் வாழ்வு வளம் உண்மையான செல்வமாகாது. மாறாகத் தம்மைச் சூழ வாழ்வார் துயர்உற நேர்ந்தபோது, அவர் துயரைத் தம் துயராக்கொண்டு நெஞ்சுருகுவதும், அத்துயர் துடைப்பதும் ஆகிய இரக்க உள்ளமும் இனிய செயலும் உடைமையாம் பண்பே பெறற்கரும் பெருஞ் செல்வமாம் என மதிப்பார்கள் சான்றோர்கள் என்று கூறுகிறார் ஒரு பெரியார்:

"நெடிய மொழிதலும், கடிய ஊர்திலும்

செல்வம் அன்று. சான்றோர் செல்வம் என்பது, சேர்ந்தோர் புன்கண் அஞ்சும் பண்பின் மென்கண் செல்வம், செல்வம் என்பதுவே."

. சான்றோர்கள் மதிக்கும் அச்செல்வத்தினும் சாலச் சிறப்புடைய செல்வத்தைப் பெற்றிருந்தாள் கண்ணகி, அவள் உள்ளம், தொடர்பு அற்றவர்தம் துயர்நிலை காணினும் துவண்டு துடிக்கும் தனிச் சிறப்பு வாய்ந்தது. “. . . , • ,

"இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்

என்ன பயத்ததோ சால்பு:” . என்ற வள்ளுவர் வகுத்த இலக்கணத்துக்குத் தானே இலக்கியமாகத் திகழ்ந்தவள் கண்ணகி. கவுந்தி அடிகள் முன்னே செல்லக் கணவனோடு காட்டுவழியைக்