பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 ஒ புலவர் கா. கோவிந்தன்

அறுசுவை உணவைப் படைத்து, அருகில் அமர்ந்து ஊட்ட, உண்டு முடித்த கணவனுக்கு வெற்றிலை பாக்கை மடித்துக் கொடுத்துப் பணிவிடை புரிந்தாள். இக்காட்சியைக் கண்ணுற்ற மாதரியும், மகள் ஐயையும், "நம்பி, நம்குலத் தெய்வமாம் கண்ணனோ? நங்கை, அக்கண்ணன் துயர்தீர்த்த நப்பின்னையோ?” என வியந்து பாராட்டி மகிழ்ந்தார்கள். *

பிறந்த பொன்னகராம் புகார்விட்டு மதுரை நோக்கிக் கணவனோடு புறப்பட்ட கண்ணகி, அன்று வரை மண்ணில் கால் வைத்தறியா மாளிகைவாசி யாகவே இருந்த தனக்குக் கொடுவெனிற் காலத்தில் கால் கொப்புளிக்கக் காட்டு வழியைக் கடப்பது கடுந் துன்பமாகவே இருப்பினும், அந்நிலையிலும் தன் துன்ப்த்திற்காகத் துவளாது, உடன்வரும் தன் கணவன்ாம் கோவலன், செல்வச் செருக்கில் சிறக்க வாழ்ந்திருப்பதற்கு இயலாது, இவ்வாறு வந்து இடர் உற நேரிட்டதே எனக் கணவன் துயர்நிலை கண்டே கலங்கினாள்; கவன்றாள்; கண்ணிர் சொரிந்தாள். கண்ணகியின் இப்பண்பு,

喙 经 锻 毫 ,哆 懿“哆 必 . . . . . . . . நங்கைதன் வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திலள்: கடுங்கதிர் வெம்மையின் காதலன் தனக்கு நடுங்குதுயர் எய்தி நாப்புலர வாடித் தன் துயர் காணாத் தகைசால் பூங்கொடி

- சிலம்பு 15:137-11