பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாதரர் தொழுதேத்தும் மாண்புடையாள் இ 135

எனக் கவுந்தி அடிகளாராலும் பாராட்டப் பெறுவதா

கணவன் விரும்பும் உணவாக்கிப் படைத்ததும், தன் துயர் காணாது கணவன் துயர்க்குக் கலங்கியதும். ஆகிய இவ்விரு செயல்களும், கண்ணகிபால் பொருந்தி யிருந்த தற்கொண்டான் பேணற் பண்பிற்குப் பொருந்தும் சான்றுகள் ஆகாவோ?

கற்புடைய மகளிர் இயல்பை உணர்ந்தவள் கண்ணகி. கணவன் இறந்தான் என்ற செய்தி கேட்ட அக்கணமே, தன் உயிர்கொண்டு அவன் உயிர் தேடுவாள்போல் உயிர் இழந்து போவாளும், அவ்வாறு உடனுயிர் பிரியாதாயின், கணவனை இழந்து கணப்போதும் வாழ நினையா மனம் உடைமையால், கணவன் உடலுக்கு ஊட்டிய எரியில் உடன் வீழ்ந்து உயிர்துறப்பவளும், அதுவும் இயலாத நிலையில் இப்பிறவியில் இழந்த உடனுறை வாழ்வு மறு பிறவியி லாவது குறைவற வாய்க்கவேண்டும் என்ற வேட்கை யால் கைம்மை நோன்பு மேற்கொள்பவளும் ஆகிய இம் மூவருமே கற்புடைய மகளிர் என மதிக்கத் தக்கவர்தாம் என்றாலும், இம்மூவருள், தலையாய கற்புடையவள் என மதிக்கத்தக்கவள், உடன் -உயிர் இழப்பவள்தான் என்பதைக் கண்ணகி அறிவாள். அறிந்தவளாயின், கோவலன் கொலையுண்டான் என்ற செய்தி கேட்ட ஆயர்பாடியிலேயே, கேட்ட அக்கணமே உயிரிழந் திருக்க வேண்டாமா என்ற வினா எழல்கூடும். அவ்வாறு உயிர் இழப்பதில் தன் பெருமை உயரும்