பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 இ. புலவர் கா. கோவிந்தன்

புகழ்கேட்டு நாணுதல்

பெண்மைக்குப் பெருமைதரும் பண்புகளுள் நாணமும் ஒன்று. -

"அச்சமும் நானும் மடனும் முந்துறுத்த நிச்சமும் பெண்பாற்கு உரிய" என்கிறார் ஆசிரியர் தொல்காப்பியனார். நற்குடி மகளிர்க்கு நாண் உயிர்போன்றது; ஏன், உயிரினும் சிறந்தது. நாணிலா மகளிர், உயிரிலா மட்பாவைக்கு நிகராவர். அத்தகையவர், தம்மிடம் பெருமைக்குரிய பண்புகள் எவ்வளவுதான் மிகுதியாக நிறைந்து கிடப்பினும், அவற்றைப் பலரும் அறியப் பறை கொட்டித் திரியாது, தமக்குள்ளாகவே அடக்கி வைத்திருக்கவே விரும்புவர். அப்பெருமைகளை அறிந்தவர், அவற்றைத் தம் முன்னாகவே எடுத்துக் கூறிப் புகழத் தலைப்படின் அதுகேட்டு இறுமாந்து நில்லார். அதற்கு மாறாகப், பிறர் புகழப் புகழ இவர்கள் நாணித் தலைகுனிந்து கொள்வர். இதுதான் பெரி யோர்க்கு அழகு. -.

"பணியுமாம் என்றும் பெருமை சிறுமை

அணியுமாம் தன்னை வியந்து" என்கிறார் வள்ளுவர். பெருமை குனிந்து காட்டும்; சிறுமை நிமிர்ந்து காட்டும் எனக் கூறும் வள்ளுவர் வாக்கிற்கு, பெருமை எனும் சொல்லில் இடையின ரகரம் இடம் பெற, சிறுமை என்னும் சொல்லில் வல்லின றகரம் இடம்பெறுவதாம் எடுத்துக்காட்டு,