பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாதரர் தொழுதேத்தும் மாண்புடையாள் இ 13

உலாவரும் காமன்காண் எனப் பாராட்டும் பெருமைக்கு உரியவன். அத்தகையவன் யாவன் எனில், அவன்தான் கோவலன் எனப்படுவான்’ என்று கூறியுள்ளார்.

"பெருநிலம் முழுதாளும் பெருமகன் தலைவைத்த

ஒருதனிக் குடிகளோடு உயர்ந்தோங்கு செல்வத்தான் வருநிதி பிறர்க்கு ஆர்த்தும் மாசாத்துவான் என்பான் இருநிதிக் கிழவன் மகன், ஈரெட்டாண்டு அகவையான். அவனுந்தான், - ..., - மண்தேய்த்த புகழினான் மதிமுக மடவார்தம் பண்தேய்த்த மொழியினார் ஆயத்துப் பாராட்டிக் கண்டு ஏத்தும் செவ்வேள் என்று இசைபோக்கிக்,

(காதலால் கொண்டு ஏத்தும் கிழமையான் கோவலன் என்பான்

- . (மன்னோ”

கோவல்னை அவ்வாறு பாராட்டிய புலவர், கண்ணகியைப் பாராட்டுங்கால் வாழ்வார்க்கு இன்பம் வழங்கி, வளமார் புகழ்பெறு நிலையில் நாகர் உலகோடும் தேவர் உலகோடும். ஒருபுடைத்தாய் உயர்ந்த புகார் நகரத்தில் ப்ெருவாழ்வு வாழ்ந்திருந்த வனும், கார்மேகம் போலும் கொடைவளம் வாய்ந்த வனுமாகிய மாநாய்கன் என்பானின் குலக்கொம்பு பொன்னால் ஆன பூங்கொடி போலும் பொற்புடை யாள் பன்னிராண்டிற்கு உட்பட்ட பிராயத்தவள். மதிக்கத்தக்க மாண்புடைய மாதர் பலரும், "மலர் உறையும் திருமகளாரின் புகழ் மிக்க வடிவழகு இவள் வடிவழகாகும்” என்றும், "குற்றமிலாக் கற்புடைய