பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாதரர் தொழுதேத்தும் மாண்புடையாள் ; 139

அக்குறளிலேயே இடம் பெற்றுள்ள நயம் அறிந்து இன்புறற்கு உரித்து. நிற்க, மாலை வரக்கண்டு மரத்து இலைகள் குவியக் கிளைகள் தாழ்ந்து தோன்றும் மரக்காட்சிக்குப் புகழ் கேட்டுத் தலைவணங்கும் சான்றோர் நிலையை உவமை கூறும் முகத்தான், சான்றோர்தம் இயல்பை விளக்கி யுள்ளார் ஒரு புலவர்.

бt =

தம் புகழ் கேட்டார்போல் தலைசாய்த்து மரம் துஞ்ச."

- கலி. 119 : 6

போர்க்களத்தில் தான் காட்டிய பெருவீரச் செயல்களைப் பலரும் கூடியிருந்து பாராட்டப் பாராட்டக் கேட்டுத் தலைவணங்கிய வீரன் ஒருவனை அறிமுகம் செய்துள்ளார் புலவர் அரிசில்கிழார்.

"பரந்தோரெல்லாம் புகழத் -

தலைபணிந்து இறைஞ்சியோனே குருசில்” . புறம் 285.

சான்றோர்கள், இவ்வாறு புகழ் கேட்டவழி நாணுவது மட்டுமன்று; புகழ்வதற்கு முன்பேகட, புகழ்வார்கள் என்பதை எதிர்பார்த்த அளவிலேயே நாணிவிடு வார்கள் என்கிறார் மற்றொரு புலவர்.

"சான்றோர் புகழும் முன்னர் நாணுப." - குறுந். 252.

பெருமைக்கும் உரனுக்கும் உரியவர் எனக் கருதப்

பட்ட ஆடவரிடத்திலேயே இப்பண்பு அமைய வேண்டும் என்றால், தம்பால் பொருந்த வேண்டிய

- பண்புகள் பலவற்றுள் நாணையும் ஒன்றாகக் கொண்ட

பெண்டிர்பால், அந்நாண் அமைய வேண்டுவது மிகமிக