பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 & புலவர் கா. கோவிந்தன்

இன்றியமையாதது அல்லவோ? அப்பண்பைக் கண்ணகி நல்லாள், குறைவறப் பெற்றிருந்தாள்.

கவுந்தி அடிகளாரோடும் கணவனாம் கோவல னோடும் மதுரைக்குப் புறப்பட்ட கண்ணகி, இடை வழியில், எயினர் சேரியைச் சேர்ந்த ஐயை கோட்டத்தில், வழிநடை வருத்தம் தீர, சற்றே இளைப் பாறியிருந்தாள். அப்போழ்து, தெய்வம் ஏறப் பெற்றவாளாகி, ஐயை கோட்டம் புகுந்த தேவராட்டி, ஆங்குக் கணவனோடு இருந்த கண்ணகியைக் கண்ணுற்ற அளவே, "இதோ, ஈண்டு வீற்றிருக்கும் இவள், கொங்கு நாட்டுக் கொற்றவை; குடநாட்டு அரசி; செந்தமிழ்ப் பெருந்தெய்வம்; தவத்தின் திருவுருவம்; உலகில் பெண்ணுருவம் தாங்கி வந்த திருமாமணி” என்றெல்லாம் கூறி வாயாரப் பாராட்டிப் பரவினாள். கவுந்தியும் கணவனும் ஆகிய இருவர் முன்னிலையில், தேவராட்டியைப் பின்தொடர்ந்து வந்த எயினர் கூட்டத்தின் இடையில், தேவராட்டி அவ்வாறு தன்னைப் பாராட்டுவது கேட்ட அளவே, கண்ணகி யின் உள்ளம் நாணிவிட்டது. அவள் தலை குனிந்து விட்டது. அவளால் அவர்கள் முன்நிற்கவும் முடியா தாகிவிட்டது. உடனே, அவள் கணவனுக்குப் பின் புறமே சென்று மறைந்து கொண்டாள். அதுமட்டு மன்று அவ்வாறு மறைந்துகொள்ளச் செல்வாள் வறிதே சென்றாளும் அல்லள். "தேவராட்டி 'தெளிந்த அறிவோடு கூறினாளல்லள்; தெய்வம் ஏறப்பெற்ற மயக்கத்தால் ஏதேதோ பிதற்றிவிட்டாள்" என்று,