பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள் ஒ 141

- அப்புகழ் உரைகளை ஏற்றுக் கோடலை மறுப்பாள் போல் கூறிக் கொண்டே சென்று மறைந்தாள். கண்ணகியின் இச்செயல், "சான்றோர் புகழும் முன்னர் நாணுப” என்ற சான்றோர் இலக்கணத்திற்கு நல்ல இலக்கிய மாதல் காண்க -

"இவளோ, கொங்கச் செல்வி: குடமலையாட்டி: தென்தமிழ்ப் பாவை செய்த தவக் கொழுந்து ஒரு மாமணியாய் உலகிற்கு ஓங்கிய திருமாமணி எனத் தெய்வம் உற்று உரைப்பப் பேதுறவு மொழிந்தனள் மூதறிவாட்டி என்று அரும்பெறற் கணவன் பெரும்புறத்து ஒடுங்கி."

- சிலம்பு. 12 : 47-52

தன்னிற் சிறந்தாரைத் தான் போற்றல்

தம்மைப் பிறர் புகழக் கேட்க நேர்ந்த வழி நாணித் தலைகுனியும் சான்றோர், தம்மினும் சிற்ந்தாரைப் பாராட்டி வழிபடின், அது அவர் பெருமையைப் பன்மடங்கு மேலும் உயர்த்தும். ஒருவற்கு அணியாவன பணிவுடையவன் ஆதலோடு இன்சொலன் ஆதலும் ஆம் என்கிறார் வள்ளுவர். இப்பண்பும் கண்ணகிபால் பொருந்தியிருந்தது. மாதரார் தொழுதேத்தும் மாண்புட்ையளாய்த் திகழ்ந்த கண்ணகி, தான் பிறந்த புகார்நகரில் பிறந்து, சிறக்க வாழ்ந்து, பிறந்த பேரூர்க்குப் பெருமை தேடித் தந்த பெண்டிர்பால் மதிப்பும் மாறா அன்பும் கொண்டு பாராட்டிப் பெருமை செய்துள்ளாள்.