பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாதரர் தொழுதேத்தும் மாண்புடையாள் இ 143

டிருந்தான். மீள்வோன், தன் வரவை எதிர்நோக்கிக் காத்துக்கிடக்கும் காதலி, "வருவதாக வாக்களித்துச் சென்ற காலம் வரவும் காதலன் வந்திலனே!” எனக் கலங்குவாள். வினைமுடித்து வீடு நோக்கி வந்து கொண்டிருப்பதை அவள் அறியின், அவள் கவலை நீங்கி மகிழ்வாள். வரவை, எதிர்நோக்கி இருப்பவள், சேய்மைக்கண் வரும் தன் தேரைக் காண இயலாது போயினும், அத்தேரில் கட்டிய மணியொலி கேட்டு வரவுணர்ந்து மகிழ்வாள். ஆனால், மணியொலி கேட்பதோ இப்போது இயலாது. கார்காலத்துப் புதுமழை பெய்யக் களித்திருக்கும் தவளைகள், அக்களிப்பு மிகுதியால் ஓயாது கத்திக் கத்தி எழுப்பும் ஒலி, அம்மணியொலியைக் கேளாவாறு செய்து விடுமோ எனக் கலங்கினான். உடனே, உடன்வரும் ஏவல் இளையர் சிலரை அழைத்து, தன் வருகையை விரைந்து சென்று அறிவிக்குமாறு போக்கினான். அவர்களும், காதலன் வருகையை எதிர் நோக்கிக் காத்துக் கிடப்பவள்பால் சென்று, அவன் வருகையை அறிவித்தனர். அச்செய்தி கேட்டு மகிழ்ந்தது அவள் உள்ளம், மலர்ந்தது அவள் முகம்; மயிரின் மாசுபோக நீராடுவதும் செய்யாது அவன் வருகையை எதிர்நோக்கி யிருந்தவள், அவன் வருகிறான் எனும் செய்தி கேட்ட அக்கணமே விரைந்து சென்று நீராடினாள்; மாசு நீங்கிய மயிரில் எண்ணெய் தடவி வாரி முடித்தாள். முற்றத்தில் உள்ள செடியில் மலர்ந்திருக்கும் மணம் விசும் மலர்கள் சிலவற்றைப் பறித்துத் தன் கூந்தலில்