பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 இ. புலவர் கா. கோவிந்தன்

சூட்டிக்கொண்டாள். அந்நிலையில் அவனும் வந்து விட்டான். காதலனைக் கண்ட மகிழ்ச்சி கட்டுக் கடங்காததாயிற்று. தன்னை மறந்தாள். மயிர் முடித்து மலர் சூட்டி நிற்பதையும் மறந்தாள். அப்படியே உடல் குழைய, கூந்தல் குலைய ஒடி, அவனைத் தழுவிக் கொண்டாள். இந்த இன்பக் காட்சியைப் படம் பிடித்துக் காட்டியுள்ளார் ஒரு புலவர்: -

ff

பழமழை பொழிந்த புதுநீர் அவல நாநவில் பல்கிளை கறங்க, நாவுடை மணியொலி கேளாள் வாணுதல் அதனால் ஏகுமின் என்ற இளையர் வல்லே இல்புக்கு அறியுநராக, மெல்லென மண்ணாக் கூந்தல் மாசறக் கழிஇச் சில்போது கொண்டு பல்குரல் அழுத்திய அந்நிலை புகுதலின், மெய் வருத்துறாஅ அவிழ்பூ முடியினள் கவைஇய -

மடமா அரிவை மகிழ்ந்து அயர் நிலை."

பெண்டிர், கணவன் இல்லாக் காலத்தில், தம்மை அணிசெய்து கொள்ளா அந்நிலையோடு நின்றுவிட வில்லை. அவன் இல்லாதபோது இயல்பாகப் பெற்றிருக்கும் தம் அழகை இழந்துவிடவும் துணிந்து முன்வந்தனர். "கணவன் மகிழ்தற்கு இல்லா என் அழகு கெட்டுப் பேய் வடிவு உடையேன் ஆக அருளுக!” என வேண்டி அப்பேய் வடிவம் பெற்றாள் ஒரு பெண். கடல் கடந்துபோன கணவன் வருமளவும் அழகு முகம் இழந்து குரங்கு முகம் பெற்று வாழ்ந்தாள். ஒரு பெண்.