பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாதரர் தொழுதேத்தும் மாண்புடையாள் இ. 145

பொருள் தேடி வருதல், புகழ் ஈட்டி வருதல்போலும் காரணமாகக் கணவன்மார் ஒரு சில திங்கள் பிரிய நேர்வதற்கே, மகளிர், அவ்வாறு கோலங் கொள்ளாமையும் குரங்கு முகம் ஆக்கிக் கோடலும் மேற்கொள்வர் என்றால், கணவன் . தன் காதலை அறவே மறந்து கணிகையர் தொடர்பு கொண்டு விட்டான் என்பது அறிந்த கண்ணகிபால், கோலங் கொள்ளா அப்பண்பு அமையாது போய்விடுமோ?

கோவல்ன், தன்னோடு உடனுறை வாழ்க்கை மேற்கொண்டிருந்தபோது, "உன் அழகுக்கு அழகுதர மங்கல அணி ஒன்றே போதுமானதாகவும், வேறு அணிகளை அணிவித்தது ஏனோ சில மலர் சூட்டவே பேரழகு செய்யும் உன் கூந்தலில் மலர்களை மாலை மாலையாகச் சூட்டியது ஏனோ அகிற்புகை ஊட்டிய தால் எழும் நறுமணம் ஒன்றே போதுமானதாகவும், அதற்கு மேலும் கஸ்தூரிச் சாந்தைப் பூசியது ஏனோ? மார்புக்கு மாண்பளிக்க வண்ண வண்ணக் குழம்பு கொண்டு தீட்டப்பெற்ற தொய்யிற்கோலம் ஒன்றே போதுமானதாக, முத்து வடங்களைப் பூட்டியது ஏனோ?” என்றெல்லாம் வினாவுமுகத்தான், அக் கோவலன் பாராட்டிப் பெருமை செய்ய, மங்கல அணியோடு மற்றும் பல அணிகளை அணிந்தும், மாலை மாலையாக மலர்களைச் சூடியும், அகிற் புகையோடு மான்மதச் சாந்தைப் பூசியும், தொய்யிற் கோலத்துக்கு மேலும் முத்தாரங்களை அணிந்தும் தன்னை ஒப்பனை செய்து கொள்வதில் ஆர்வம்